இதை மட்டும் செய்தால் அதிமுகவுடன் நான் கைகோர்ப்பேன்.. திருமாவளவன் சரவெடி..!
நாடாளுமன்ற இரு அவைகளிலும் தலைவராக இருப்பவர் குடியரசு தலைவர். அவர் தான் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும். புதிய நாடாளுமன்ற கட்டிட அடிக்கல் நாட்டு விழாவின் போது அப்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை.
கள்ளச்சாராய மரணம் மிகப்பெரிய வேதனை அளிக்கிறது. முழு மது விலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தமிழகத்தில் கள்ளச்சாராய இறப்புகள் மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. பூரண மதுவிலக்கை அமல்படுத்த அதிமுக சார்பில் போராட்டம் அறிவித்தால், அந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும். முழு மதுவிலக்கை வலியுறுத்தி மக்கள் இயக்கத்தை தொடங்க இருக்கிறோம் என தெரிவித்தார்.
இதையும் படிங்க;- தந்தை பெயரை சொல்லி உடன்பிறந்த அண்ணனையே விரட்டி அடித்தவர் ஸ்டாலின்.. தங்கம் தென்னரசை விளாசிய ஜெயக்குமார்.!
மேலும், நாடாளுமன்ற இரு அவைகளிலும் தலைவராக இருப்பவர் குடியரசு தலைவர். அவர் தான் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும். புதிய நாடாளுமன்ற கட்டிட அடிக்கல் நாட்டு விழாவின் போது அப்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை. தற்போது திறப்பு விழாவில் குடியரசு தலைவர் அழைக்கப்படவில்லை.
இதையும் படிங்க;- புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா விவகாரம்... திட்டமிட்டு உள்நோக்கத்தோடு செய்தது; திருமாவளவன் குற்றச்சாட்டு
அதுமட்டுமில்லாமல் மே 28-ம் தேதி என்பது சாவர்க்கரின் பிறந்த நாளாக உள்ளது. சனாதன தர்மத்தை நிலைநாட்ட பெரிதும் பாடுபட்டவர் சாவர்க்கர். அவர் பிறந்த நாளில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு காரணங்களுக்காக நாங்கள் நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டோம் என அறிவித்துள்ளோம். இந்த விழாவிற்கு குடியரசு தலைவரும் அழைக்கப்பட வேண்டும். திறப்பு விழா தேதியும் மாற்றப்பட வேண்டும் என தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.