பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என தமிழக பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

தூத்துக்குடியில் பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- பாஜக வேட்பாளர் என ஊடகங்களில் வெளிவந்த லிஸ்ட் பாஜக சார்பில் தயார் செய்ததில்லை. கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்த யாரோ ஒருவர் வெளியிட்ட லிஸ்ட் தான் அது. பாஜக கூட்டணியில் எந்த குழப்பம் இல்லை.

பாஜக மேலிடம் முடிவு செய்தால் வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிடுவேன். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தவறு செய்தவர்கள் கட்சி வேறுபாடின்றி தண்டிக்கப்பட வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவர் என்று அண்ணாமலை தகவல் தெரிவித்துள்ளார்.