தமிழக பாஜக தலைவராக, ஆகஸ்ட் 2014 ஆம் ஆண்டு, முதல் தமிழிசை சௌந்தரராஜன் இருந்து வருகிறார். 2019 ஆம் ஆண்டு வரை அவர் இந்த பதவியில் நீடிப்பார். 

தமிழிசை சௌந்தரராஜனுக்குப் பிறகு, அடுத்து தலைவராகும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் அடுத்த பாஜக தலைவராக சிலரின் பெயர் கூறப்பட்டு வந்த நிலையில், பாஜக தலைவர் பதவியை ஏற்க தயார் என்றும், வாய்ப்பளித்தால் இப்போதிருப்பதைவிட கூடுதல் வாக்கு வங்கியைப் பெற்றுத் தயார் என்றும் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் எஸ்.வி.சேகர் வழிபாடு நடத்தினார். இதன் பிறகு, அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம், பாஜகவின் தமிழக மேலிடத்தை ஏற்கவில்லையா? இந்த கேள்வியை தவறாக புரிந்து கொண்ட எஸ்.வி.சேகர், பாஜக தலைமையை ஏற்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தால், கண்டிப்பாக ஏற்றுக் கொண்டு இப்போதுள்ள வாக்கு வங்கியைவிட அதிக வாக்கு வங்கியை என்னால் உருவாக்க முடியும் என்றார்.  

தமிழக பாஜக தலைவர் பதவியை தாம் ஏற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்து எஸ்.வி.சேகர் பேசியது தமிழக பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.