இது தொடர்பான வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்தது, அதேவேளையில் சசிகலாவின் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் அதிமுக நிர்வாகிகள் தரப்பில் எதிர் மனு தாக்கல் செய்யப்பட்டது. சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை உச்சநீதிமன்றமும் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்ட நிலையில் அவர் தன்னை அதிமுக பொதுச் செயலாளர் என கூறிவருவதை தடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கோரப்பட்டு வந்தது.
அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியது செல்லும் என்ற உரிமையியல் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் என சசிகலா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு சசிகலா சிறைக்கு சென்றார். அவர் திரும்பி வருவதற்குள் அதிமுகவை கைப்பற்றிக்கொண்டு எடப்பாடி பழனிச்சாமி- ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பொதுக் குழுவை கூட்டி சசிகலாவை அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கினர். பின்னர் சிறையில் இருந்து விடுதலையான சசிகலா தன்னை கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது என்றும், அதிமுகவின் பொதுச் செயலாளர் தான் தான் என்றும் உரிமை கோரினார்.

அதாவது 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி அதிமுகவின் பொதுச் செயலாளராக தன்னையும், துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரனையும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் சேர்ந்து தேர்ந்தெடுத்ததையும் மேற்கோள் காட்டிய அவர் இவ்வாறு உரிமை கோரினார். அதேபோல் பொதுச் செயலாளர் மூலமாகத்தான் பொதுக் குழுவை கூட்ட முடியும், அப்படி இன்றி ஓபிஎஸ், இபிஎஸ்சால் கூட்டப்பட்ட பொதுக்கு செல்லாது என அறிவிக்கக்கோரியும், அந்தபொதுக் குழுவில் தங்களை கட்சியில் இருந்து நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக்கோரியும் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தரப்பில் சென்னை மாவட்டம் நான்காவது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதேபோல் கட்சியில் ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி உருவாக்கப்பட்டது சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டும் என்றும் சசிகலா தரப்பில் கோரப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்தது, அதேவேளையில் சசிகலாவின் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் அதிமுக நிர்வாகிகள் தரப்பில் எதிர் மனு தாக்கல் செய்யப்பட்டது. சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை உச்சநீதிமன்றமும் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்ட நிலையில் அவர் தன்னை அதிமுக பொதுச் செயலாளர் என கூறிவருவதை தடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கோரப்பட்டு வந்தது. இந்நிலை யில்தான் அமமுக என்ற கட்சியை தனியாக உருவாக்கி நடத்தி வருவதால் இந்த வழக்கில் இருந்து விலகிக் கொள்வதாக டிடிவி தினகரன் திடீரென அறிவித்தார். எனவே உரிமையில் நீதிமன்றம் சசிகலாவின் வழக்கை மட்டும் விசாரித்து வந்தது. அதில் இரு தரப்பு வாதங்களையும் நான்காவது கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஜெயஸ்ரீ விசாரித்து வந்த நிலையில் அதன் மீது இன்று தீர்ப்பு வழங்கினார்.

அதில், சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி அதிமுக பொதுக்குழுவில் இயற்றிய தீர்மானம் செல்லும் என்றும் அறிவித்ததுடன், சசிகலாவின் மனுவை தள்ளுபடி செய்தார். இது சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எந்த காலத்திலும் சசிகலாவை கட்சியில் சேர்ப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என ஓபிஎஸ் இபிஎஸ் கூறிவரும் நிலையில் இந்த தீர்ப்பு அவர்களுக்கு கூடுதல் பலத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் நாமக்கலில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு வந்திருந்த சசிகலாவிடம் தீர்ப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். தன்னை கட்சியில் இருந்து நீக்கியது செல்லும் என உரிமையியல் நீதி மன்றம் கொடுத்துள்ள இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் என்றார்.
