நாம் தமிழர் கட்சி என்ற கப்பலுக்கு நான் தான் ஒரே மாலுமி, நம்பிக்கை இருந்தால் என்னோடு பயணம் செய்யுங்கள், இல்லையெனில் கட்சியில் இருந்து புறப்படுங்கள் என சீமான் கூறியுள்ளார்.

மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு சீமான் பேசுகையில்;- மக்காக மக்கள் காத்திருக்கிறார்கள் அவர் அருகில் செல்லுங்கள், நான் அறிவித்த வேட்பாளர் குறித்து என்னிடம் கேள்வி கேட்கக்கூடாது, நான் போட்ட கோட்டிற்குள் தான் நீங்கள் செயல்பட வேண்டும். நான் எந்த திசையை நோக்கி ஒடுகிறேனோ அதை திசையில் நீங்களும் ஓட வேண்டும்.

உங்களின் கருத்துகளை கேட்டு நான் நடக்கமாட்டேன், நாம் தமிழர் கட்சி என்ற கப்பலுக்கு நான் தான் ஒரே மாலுமி, நம்பிக்கை இருந்தால் என்னோடு பயணம் செய்யுங்கள், இல்லையெனில் கட்சியில் இருந்து புறப்படுங்கள். நான் அறிவிக்கும் வேட்பாளர்கள் குறித்து தொண்டர்கள் யாரும் என்னிடம் கேள்வி கேட்க கூடாது. வேட்பாளர்கள் அறிவிப்பை யாரேனும் எதிர்த்தால் கிரீஸ்டப்பாவை மிதிப்பது போல் மிதித்து விடுவேன் என ஆவேசமாக பேசியுள்ளார்.

மேலும், பேசிய நாம் தமிழர் கட்சி மீது நம்பிக்கையை உருவாக்க வேண்டும் அதுவரை ஓயமாட்டேன். ஒதுக்கக்கூடிய சமூகத்திற்கு நாம் தமிழர்கள் கட்சியில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கிறோம். உலகமே என் பேச்சை கேட்கும், ஆனால் நான் பிரபாகரன் பேச்சை தவிர யார் பேச்சையும் கேட்க மாட்டேன் என கூறினார்.