என்னை வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் தடுப்பதற்காவே எடப்பாடி காவல்துறையை ஏவிவிடுகிறார் என்று குற்றம் சுமத்தியிருக்கிறார் திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி.

அரவக்குறிச்சி தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக கரூர் மாவட்ட பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி வீட்டில் சென்னை போலீசார் அதிரடி சோதனை நடசத்தி வருகின்றனர். 

கரூர் ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில்பாலாஜியின் வீடு, அவரது சகோதரர் வீடு மற்றும் சென்னையில் உள்ள வீடு என 3 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

அதிமுகவில் 2011-15 காலகட்டத்தில் போக்குவரத்துறை அமைச்சராக செந்தில்பாலாஜி இருந்த போது போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித்தருவதாக16பேரிடம்ரூ.95லட்சம்பெற்றுமோசடிசெய்ததாகப்புகார்இருந்தது. 

 இந்த மோசடி குறித்து அம்பத்தூர் கணேஷ்குமார் என்பவர் மத்திய குற்றப்பிரிவு போலீஸில் ஏற்கனவே புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

செந்தில்பாலாஜி திருச்சியில் திமுக நடத்தும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் இருக்கும் சமயத்தில் இந்த சோதனை நடைபெற்று வருகின்றது. 'நான் இல்லாத நேரத்தில் என் வயதான அப்பா,அம்மா,வீட்டு வேலையாட்களை மிரட்டி விசாரணை என்கிற பெயரில் எடப்பாடி அரசு செய்து வருகிறது.
புகாரில் என் பெயரோ,என் தம்பி பெயரோ இல்லை .அந்த புகார் உண்மையில்லை என்று நீதிமன்றத்திமே சொல்லியிருக்கிறது.அப்படி இருக்கும் போது பழைய புகார் என்று சொல்லி என் வீடுகளிலும் ,கட்சியினர் வீடுகளிலும் சோதனை செய்கிறார்கள். நான் வருகின்ற சட்டமன்றத்தேர்தலில் போட்டியிடக்கூடாதுஎன்பதற்காகதன்இப்படிநடத்துகிறார்எடப்பாடி.
என் மீது வழக்கு போட்டு நீதிமன்றம்,போலீஸ் விசாரணை என்று நான் அழைய வேண்டும் என்பது தான் அதிமுக நோக்கமாக உள்ளது. என்னை பொறுத்தவரைக்கும் இந்த வழக்கை நேர்மையாக எதிகொள்ள தயாராக இருக்கிறேன்.சோதனை என்கிற போக்கில் அராஜகம் செய்யும் அதிமுக,காவல்துறையும் எப்படி சந்திக்க வேண்டும் என்பதும் எனக்கு தெரியும் என்கிறார் செந்தில் பாலாஜி.

T.Balamurukan