ததும்ப ததும்ப முழு போதையில் தங்க தமிழ்செல்வன் வரம்பு மீறி பேசியதால் அவரது பவிசு வெளியே தெரிய வேண்டும் என்பதற்காகவே அவர் போனின் பேசிய ஆடியோவை வெளியிட்டோம் என டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் தெரிவித்துள்ளார்.

பொட்டத்தனமான அரசியல் செய்கிறார் டி.டி.வி.தினகரன். பேடித்தனமான அரசியலை அவர் செய்தால் வெற்றி பெற முடியாது அழிந்து விடுவார் என தங்க தமிழ்செல்வன் பேசிய உரையாடல் ஆடியோ வெளியாகி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த ஆடியோவை டி..டி.வி.தினகரன் தரப்பு வெளியிட்டதா? அல்லது தங்க தமிழ்செல்வன் தரப்பு வெளியிட்டதா? என பலருக்கும் சந்தேகம் இருந்து வந்தது. 

இந்நிலையில் இந்த ஆடியோவில் தங்க தமிழ்செல்வனுடன் பேசியது மதுரை மாவட்ட அமமுக நிர்வாகி செல்லப்பாண்டியன் என்பது தெரிய வந்துள்ளது. மதுரை சென்றால் இந்த செல்லப்பாண்டியன் தான் டி.டி.வி.தினகரனுடன் எப்போதும் இருப்பார். அனைத்து உதவிகளையும் செய்து தருவது இவர் தான். இந்நிலையில் தான் செல்லப்பாண்டியனுக்கு போன் போட்டு தங்க தமிழ்செல்வன் போன் போட்டு பேசியுள்ளார். 

இதுகுறித்து செல்லப்பாண்டியன் கூறுகையில், ‘இரவு நேரத்தில் ஃபுல் போதையில் தங்க தமிழ்செல்வன் எனக்கு போன் போட்டார். அப்போது காலையில் இது குறித்து பேசிகொள்ளலாம் என கூறி அவருடன் பேசுவதை தவிர்த்தேன். அவர் விடாமல் என்னுடன் போதையில் வெறியுடன் பேசினார். டி.டி.வி அண்ணனை ஒருமையிலும் தகாத வார்த்தைகளிலும் பேசினார். மறுநாள் காலையில் இது குறித்து கேட்பதற்காக தங்க தமிழ்செல்வனுக்கு போன் செய்தேன். ஆனால் அவர் எடுக்கவே இல்லை. 

இதனையடுத்தே டி.டி.வி.அண்ணனுக்கு இந்த ஆடியோவை அனுப்பி வைத்தேன். தங்க தமிழ்செல்வனின் வண்டவாளத்தை மக்களுக்கு வெளிப்படுத்தவே இந்த ஆடியோவை வெளியிட்டேன்’’ என அவர் கூறினார்.