Asianet News Tamil

3 ஆயிரம் வருஷமா தேடின என் எதிரியை கண்டுபிடிச்சிட்டேன்... ஹிந்தியில் கர்ஜிக்கும் சீமான்..!

"ச்சோடா ச்சோடா நஹி ஹே.. படா படா ஹே.." என்னங்கடா இது? அதாவது கொஞ்சம் கொஞ்சமா கொள்ளை அடிக்காதே. பெரிசா அடிச்சிவிட்ரு..ன்னு அர்த்தம்.. "பீப் எக்ஸ்போர்ட் ஹே.. இந்துஸ்தான் நம்பர் ஒன் ஹே.." 

I have searched for 3 thousand years and found my enemy ... roaring seeman ..!
Author
Tamil Nadu, First Published Mar 19, 2021, 11:36 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

"வருஷமா நீங்க செய்த பாவத்துக்கு, எங்களுக்கு ஓட்டை போட்டுட்டு பரிகாரம் தேடிக்குங்க" என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் உட்பட பல தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "திமுக, ஆகபெரும் சிந்தனையாளன் தொடங்கிய இயக்கம். மாபெரும் பேரறிஞன் தொடங்கிய கட்சி. இன்றைக்கு யாரிடம் சிக்கி தத்தளிக்கிறது எனு பாருங்கள். பார்த்து படிக்கையிலே பல நூறு தப்பு வருது. ஒருத்தன் சொல்றான், இருக்கிற மூட நம்பிக்கையிலேயே மிகப்பெரிய மூட நம்பிக்கை, பார்த்து படிக்கையிலே பல தப்பாய் படிக்கும் ஒருவர், எப்படி நல்லாட்சி தருவார்னு நம்புகிறதுன்னு கேட்கிறான்.

இந்த இனம் எந்த இடத்துல, சாபம் வாங்கிட்டு வந்ததுன்னே தெரியவில்லை. இவ்ளோ மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டாச்சு. எங்கள் புரட்சி தமிழன் சொல்றான் "தமிழன் பெருமைக்குரியவன்னு. அப்படி இருக்கும்போது, எவன்டா சொன்னது தமிழனில் தாழ்ந்தவன், தாழ்த்தப்பட்டவன்னு? செருப்பு, வௌக்குமாறு வெச்சு அவங்களை வெளுத்துவிடுங்க. நான் எங்கே தாழ்ந்து போயிட்டேன். உனக்கு வீரம் இருக்காடா? மானம் இருக்காடா? சூடு இருக்காடா? சொரணை இருக்காடா? என்கூட வந்து கருத்தியல் செய் வா. என் கூட சண்டை செஞ்சு பாரு. நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள்தானே தவிர, தாழ்ந்தவர்கள் அல்ல. எங்களை தாழ்த்தினான் பாரு, அவனைதான் தேடிட்டு இருக்கேன்.

 3 ஆயிரம் வருஷமா தேடுனோம். இப்போ எனக்கு தெரிஞ்சிடுச்சு. இனி விடுறதா இல்லை.  எம்.ஆர்.ராதா சொல்லுவாரே. 25 வருஷமா பொய் சொல்லிட்டு இருந்த வக்கீல், ஒருநாள் நீதிபதி ஆயிட்டால் உண்மை பேசுவார்ன்னு நம்புகிற இந்த கூட்டம் இது. அது மாதிரிதான், 22 வருஷம் ஆட்சியில் இருந்த திமுக, 50 ஆண்டு காலமா இந்தியாவை ஆண்ட காங்கிரஸ், இப்போ ஆண்டுக்கிட்டு இருக்கிற பாஜக இதெல்லாம் என்ன செய்ய போகுது?

7 வருஷமா நாட்டை கொடுத்ததுக்கே பிச்சைக்காரனாக்கி விட்டுட்ட பாஜக, இங்கே வந்து என்ன செய்ய போகுது? "ச்சோடா ச்சோடா நஹி ஹே.. படா படா ஹே.." என்னங்கடா இது? அதாவது கொஞ்சம் கொஞ்சமா கொள்ளை அடிக்காதே. பெரிசா அடிச்சிவிட்ரு..ன்னு அர்த்தம்.. "பீப் எக்ஸ்போர்ட் ஹே.. இந்துஸ்தான் நம்பர் ஒன் ஹே.." ஊரானுக்கு ஊட்டி விட்றது, உள்ளவன் தின்னா கொன்னு போட்டுறது. இதையெல்லாம் வெச்சிட்டு என்ன பண்றது? அவங்களுக்கு ஒரே கோட்பாடு தான். "பாகிஸ்தான் பக்கத்து நாடு.. பசுமாடு.. ஜெய்ஸ்ரீராம் கோஷம்".. அவ்வளவுதான். மக்களை பற்றி துளியும் சிந்திக்கவில்லை. காங்கிரஸ் - பாஜக தமிழ்நாட்டுல பிஜேபி வந்துடும். பிஜேபி வந்துடும்..ன்னு ஏன் சொல்லிட்டு இருக்காங்க? 

இந்த பயந்தாங்கொள்ளிங்களை வெச்சிட்டு என்ன செய்றது? அடிடா ஏறி. நின்னு சண்டை செய். நான் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன், இந்த காங்கிரசும், பிஜேபியும் என் நிலத்துக்கு எதுக்கு? என் மொழிக்கு நின்னீங்களா? நிப்பீங்களா? என் நிலத்தின் வளத்தை காக்க நின்னீங்களா? உன் இனத்தின் உரிமைக்கு நின்னீங்களா?  கச்சத்தீவை மீட்போம்னு ரெண்டு பேரும் ஒன்னா சொல்வாங்க. கச்சத்தீவு இந்தியாவின் சொத்து அல்ல, தமிழரின் சொத்து. ஊழல், லஞ்சம் பெறுபவர்களுக்கு மட்டுமல்ல அவர்களுக்கு வாக்களிப்பவர்களும் சாபத்துக்கு உள்ளாக நேரிடும். 50 வருஷமாக நீங்கள் செய்த பாவத்துக்கு எங்களுக்கு வாக்களித்து பரிகாரம் தேடிக்குங்க" என்று அவர் கர்ஜித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios