தன் பாஜகவை பற்றி யோசிக்கவில்லை என்றும், பாஜகவுடன் பேசவில்லை என்றும், குஜராத் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் ஹர்திக் பட்டேல் கூறியுள்ளார்.
தன் பாஜகவை பற்றி யோசிக்கவில்லை என்றும், பாஜகவுடன் பேசவில்லை என்றும், குஜராத் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் ஹர்திக் பட்டேல் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனை கூட நான் பாராட்டினேன், அதற்காக நான் அவரது கட்சியில் சேர்வேன் என்று அர்த்தமா? என ஹர்த்திக் பட்டியல் கேள்வியெழுப்பியுள்ளார். பாஜகவில் சேரப்போவதாக கூறப்படுகிறதே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு காட்டமாக பதில் அளித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் பட்டிதர் சமுதாயத்தின் இட ஒதுக்கீடு போராட்டத்தில் முகமாக அறியப்பட்டவர் ஹர்திக் படேல். கடந்த 2017 ஆம் ஆண்டு குஜராத் மாநில தேர்தலுக்கு முன்னர் ராகுல் காந்தியின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு காங்கிரஸில் இணைத்துக் கொண்டார் அவர். குஜராத் மாநிலத்தில் செயல் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தி தெரிவித்திருந்தார். மாநில காங்கிரஸ் கட்சியில் தனக்கு எந்த கூட்டத்திற்கும் அழைப்பு விடுக்க படுவதில்லை, அனைத்து முடிவுகளும் தன்னிடம் ஆலோசிக்காமலேயே எடுக்கப்படுகிறது. கட்சியில் எனக்கு முக்கியத்துவம் இல்லை. " நஸ்பந்தி" இதுதான் கட்சியில் எனது நிலைமை அதாவது குடும்பக்கட்டுப்பாடு செய்யப்பட்ட புது மாப்பிள்ளையாக இருக்கிறேன் என கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார்.

மேலும், நான் தற்போது காங்கிரஸில் இருக்கிறேனா இல்லையா என்பதை கட்சித் தலைமை தான் சொல்ல வேண்டும். நான் காங்கிரஸ் கட்சியில் நீடிப்பது குறித்து காட்சி நல்ல முடிவு எடுக்கும் என நம்புகிறேன். நான் காங்கிரசில் இருந்து வெளியேற வேண்டும் என பலர் விரும்புகின்றனர். எனது மன உறுதியை அவர்கள் சோதிக்கின்றனர் என டுவிட்டரில் காட்டமாக பதிவிட்டிருந்தார். குஜராத் மாநிலம் பாஜகவின் கோட்டையாக இருந்து வருகிறது, இந்நிலையில் அங்கு சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் ஹர்திக் பட்டேலின் இந்த கருத்து காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அவரின் இந்த அதிருப்தி சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் அல்லது அவர் சட்டமன்றத்திற்கு முன்பாகவே ஒரு முடிவு எடுப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் பலரும் கணித்து வருகின்றனர்.
அதே வேளையில் அவர் சமீபத்தில் பாஜகவை புகழ்ந்து பேசியதே அவர் கட்சியிலிருந்து ஓரம் கட்டப் படுவதற்கான காரணமாகவும் கூறப்படுகிறது. குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் வலிமை பெற வேண்டுமென்றால் முடிவெடுக்கும் திறன் மற்றும் அதற்கான சக்தியை மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும், பாஜக அரசியல் ரீதியான விஷயங்களில் முடிவெடுப்பதில் வலிமையுடன் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், நீங்கள் பாஜகவில் சேரப்போவதாக தகவல்கள் வருகிறதே என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் காட்டமாக பதில் அளித்தார், அதாவது பாஜகவை பற்றி சிந்திக்கவில்லை, பாஜகவுடன் எதுவும் பேசவில்லை. இதுதொடர்பாக மக்கள் நிறைய பேசுவார்கள். அதையெல்லாம் நாம் உண்மை என்று எடுத்துக் கொள்ளலாமா. அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் வெற்றி பெற்றபோதுகூட நான் அவரைப் பாராட்டினேன். காரணம் துணை ஜனாதிபதி கமலா ஹாரிசன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதனால்தான். அதற்காக நான் ஜோ பைடன் கட்சியில் சேரப் போகிறேன் என்று அர்த்தமா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
