ஓட்டுக்காக மக்களை சந்திக்கும் போது பணம் கொடுக்க முடியாது என்று பயந்துபோய் கை கட்டி நின்று சொல்லாதீர்கள்.பணம் தரமுடியாது என்று அழுத்தமாக சொல்லுங்கள் என கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் மண்டல நிர்வாகிகள் கூட்டம் சென்னை தி.நகரில்  உள்ள  நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வருகிறது . தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதி வாரியாக நிர்வாகிகளை சந்தித்து வரும் கமலஹாசன் 
நேற்றய முன்தினம் வரை 212 தொகுதி் நிர்வாகிகளை சந்தித்துள்ளார்.புதுச்சேரியில் உள்ள 30 தொகுதி நிர்வாகிகளையும், நேற்று மாலை 4 மணிக்கு மேல் சென்னையில் உள்ள 22 தொகுதி நிர்வாககளையும் சந்தித்தார். 

அப்போது கமல்ஹாசன் கூட்டத்தில் பேசியதாவது :-மூன்றாவது அணி அமைக்கும் தகுதி உங்களுக்கு வருமா என்று கேட்கிறார்கள் அது வந்துவிட்டது. எல்லாக் கிராமங்களுக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தேவை இருக்கிறது என்ற நிஜத்தை அவர்களுக்கு உணர வைக்க வேண்டும். 2013 ல் டெல்லியில் நடந்த நிகழ்வை போல் தமிழகத்திலும் நடக்க மக்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் பிக் பாஸ்ஸில் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறீர்கள் என்று சொல்கிறார்கள்.  

அதை இல்லை என்று சொல்லவில்லை, அந்த பணத்தை எங்கு கொண்டு செலவு செய்கிறேன். நான் சம்பாதித்து,என்னை வாழ வைத்தது என் வாழ்வாதாரம் எங்கே என்று பார்த்து அங்குதான் கொண்டுபோய் பணத்தை  கொட்டுக்கிறேன். ஓட்டுக்காக மக்களை சந்திக்கும் போது பணம் கொடுக்க முடியாது என்று பயந்துபோய் கை கட்டி நின்று சொல்லாதீர்கள்.பணம் தரமுடியாது என்று அழுத்தமாக சொல்லுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.