"அப்படியே அவர் சொல்லியிருந்தாலும், அவரின் வயது காரணமாக அதில் கருத்து சொல்ல விரும்பவில்லை" - சி.வி.சண்முகம்
தன்னைப்பற்றி பொன்னையன் பேசியதாக வெளியாகி உள்ள கருத்துக்கு தான் பதில் சொல்ல விரும்பவில்லை என்றும் அப்படியே அவர் சொல்லி இருந்தாலும் அவரின் வயது காரணமாக தான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை என்றும் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார்.
தன்னைப்பற்றி பொன்னையன் பேசியதாக வெளியாகி உள்ள கருத்துக்கு தான் பதில் சொல்ல விரும்பவில்லை என்றும் அப்படியே அவர் சொல்லி இருந்தாலும் அவரின் வயது காரணமாக தான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை என்றும் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அக்காட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரத்தில் ஓ பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்று அதிமுக அலுவலகத்தை கைப்பற்றி அங்கிருந்த ஆவணங்களை அள்ளிச் சென்றுள்ளார். அப்போது அங்கு ஏற்பட்ட வன்முறை காரணமாக அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் பொறுத்தவரையில் தற்போது அசாதாரண சூழ்நிலை வருகிறது.
இதையும் படியுங்கள்: பாஸ்தா சாப்பிட்ட இளம்பெண் துடிதுடித்து பலி.. திருமணமான ஒரு மாதத்தில் சோகம்..!
அக்கட்சி செங்குத்தாக இரண்டாக பிரிந்துள்ள நிலையில் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்னையன் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு குறித்து பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில் இடம் பெற்றுள்ள விவரம் பின்வருமாறு: எடப்பாடி பழனிச்சாமிக்கு எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லை, அவரிடம் வெறும் ஒன்பது எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. மொத்தத்தில் கட்சி எடப்பாடி பழனிச்சாமி கட்டுப்பாட்டில் இல்லை அவர் நான்காண்டு ஆட்சியில் மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்களை நன்றாக சம்பாதிக்க விட்டார், ஆனால் எல்லோரும் சேர்ந்து அவரது முதுகில் குத்தி விட்டனர்.
இதையும் படியுங்கள்: பொன்னையன் ஆடியோ போல் விரைவில் பல ஆடியோக்கள் வெளிவரும்..! எடப்பாடி பழனிசாமியை அலற வைத்த புகழேந்தி
தங்கமணி வேலுமசி போன்றோர் கட்சியை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் எப்படியாவது முதல்வராக இருந்தால் போதும் என எடப்பாடி பழனிச்சாமி முட்டாள்தனமாக அவர்கள் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறார். கட்சி சாதிரீதியாக சென்று கொண்டிருக்கிறது, யாருமே கட்சிக்கு விசுவாசமாக இல்லை, சிவி சண்முகம் மொத்தம் 19 எம்எல்ஏக்கள் கையில் வைத்துள்ளார், கொங்கு மண்டலத்தில் உள்ள மொத்த 42 எம்எல்ஏக்கள் எஸ்.பி வேலுமணி தங்கமணியின் கட்டுப்பாட்டில் உள்ளனர், இதில் 9 பேர் மட்டுமே எடப்பாடி பழனிச்சாமி வைத்துள்ளார். சிவி சண்முகம் அப்பா என்னது கல்லூரி தோழர், எனது மகனை விட நான்கு வயது இளையவர் சி.வி சண்முகம், பகலிலேயே குடித்துக் கொண்டிருப்பார் என அவர் அதில் பேசியுள்ளார்.
தற்போது இந்த ஆடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆடியோவுக்கு பொன்னையன் மறுப்பு தெரிவித்துள்ளார், பொன்னையின் அளித்துள்ள விளக்கத்தில், நான் பேசியதாக வெளியாகியுள்ள ஆடியோ பொய்யானது, தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிமிக்ரி செய்து பொய்யான ஆடியோவை வெளியிட்டு இருக்கிறார்கள், என் மீது அவதூறு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக இப்படி செய்திருக்கிறார்கள் என கூறியுள்ளார். ஆனால் அந்த ஆடியோவில் பொன்னையனுடன் உரையாடியதாக சொல்லப்படும் நாஞ்சில் கோலப்பன், அதில் என்னுடன் பேசுவது பொன்னையன்தான் என அடித்துக் கூறி வருகிறார்.
இந்நிலையில் அதிமுகவிலிருந்து பொன்னையன் நீக்கப்படுவாரா என செய்திகள் உலா வருகிறது, இந்நிலையில் அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது தொடர்பான தீர்மானத்தை அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி சண்முகம் நேரடியாக டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தின் தாக்கல் செய்துள்ளார். அதேபோல் கட்சி விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களும் அப்போது தாக்கல் செய்யப்பட்டது, மேலும் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவின் முடிவுகளுக்கு தேர்தல் ஆணையம் விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அப்போது தேர்தல் ஆணையத்தில் செய்தியாளரிடம் பேசிய அவர் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் தேர்தல் ஆணையத்திடம் இன்று தெரிவிக்கப்பட்டு விட்டது, பொதுக்குழு தீர்மானங்கள் சட்டத் திருத்தம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது, எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு 2428 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளனர் என்றார். முன்னாள் அமைச்சர் பொன்னையன் ஆடியோ விவகாரம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், பொன்னையன் பேசியதாக கூறப்படும் ஆடியோவிற்கு அவரே மறுப்பு தெரிவித்துள்ளார். அவரை நாங்கள் நம்புகிறோம், அப்படியே அவர் சொல்லி இருந்தாலும் அவரின் வாயது காரணமாக அதில் கருத்து சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.