பொன்னையன் ஆடியோ போல் விரைவில் பல ஆடியோக்கள் வெளிவரும்..! எடப்பாடி பழனிசாமியை அலற வைத்த புகழேந்தி

அதிமுக நிர்வாகிகளை பற்றி பொன்னையன் பேசிய ஆடியோ போல்  பல ஆடியோக்கள் உள்ளதாகவும்,  ஒவ்வொன்றாக விரைவில் வெளியிட இருப்பதாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.
 

Pugahendi said that many audios like Ponnaiyan audio will be released soon

பொன்னையனுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்
 
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ்-இபிஎஸ் என அதிமுக பிளவுபட்டுள்ளது. இதனையடுத்து ஓபிஎஸ் இன்று தனது ஆதரவாளர்களோடு ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பெங்களூர் புகழேந்தி, என்னதான்  இருந்தாலும் பொன்னையன் எம் ஜி ஆர் காலத்தில் இருந்து உடன் இருந்தவர், நாங்கள் என்னவெல்லாம் சொல்ல நினைத்தோமோ அதையெல்லாம்  பொன்னையன் தெளிவாக சொல்லி விட்டார். எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் பொன்னையன் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.  எனவே பொன்னையனுக்கு காவல்துறை  பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டு கொள்வதாக கூறினார். பொன்னையனுக்கு காவல் துறை பாதுகாப்பு வழங்கினால் இன்னும் பல உண்மைகள் வெளியே வரும் என்றும் தைரியமாக  மற்றவர்களும் வெளியில் வந்து உண்மையை சொல்வார்கள் என்று கூறினார். ஓ.பி.எஸ் காலை பிடித்து வளர்ந்தவர் கே .பி. முனுசாமி என தெரிவித்தவர், ஓபிஎஸ் தர்மயுத்தத்தை வைத்து தான் மீண்டும் அதிமுகவுக்கு முனுசாமி வந்ததாக தெரிவித்தார். ஆனால் இன்று ஓபிஎஸ் யை திட்டுவதாக கூறினார்.  பொதுக்குழுவில் அனைவரும் சரமாரியாக ஓபிஎஸ்ஐ வசைபாடி உள்ளதாக தெரிவித்தவர், வசைபாடுவதுக்கு  ஒரு பொது குழுவா?, மேடையிலேயே ஜாதி வெறியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என்றும் விமர்சித்தார்.  

அதிமுகவில் இருந்து பொன்னையன் நீக்கமா..? இபிஎஸ்க்கு நெருக்கடி கொடுக்கும் முன்னாள் அமைச்சர்கள்

அய்யோ.. எதிர்கட்சி துணை தலைவர் பதவியும் பறிக்க போறாங்க.! சபாநாயகர் அப்பாவுவிடம் கதறிய ஓபிஎஸ்.. பரபரப்பு கடிதம்

Pugahendi said that many audios like Ponnaiyan audio will be released soon

விரைவில் புதிய ஆடியோ வெளியிடப்படும்

1500 க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ஓ.பன்னீர் செல்வத்தை அழைத்து  பேச ஆரம்பித்து விட்டனர் என்றும் பொய் சொல்லி எங்களை பொதுக்குழுவிற்கு அழைத்து வந்து விட்டனர் என பொதுக்குழு உறுப்பினர்கள் புலம்புவதாக தெரிவித்தார். . அதிமுக அலுவலகத்தில் செல்லும் போது  தொண்டர்கள் யாரும் எங்களை தாக்கவில்லையென்றும் சென்னையில் உள்ள  7 மாவட்ட செயலாளர்கள் 200 ரவுடி பட்டாளதை கூட்டி வந்து எங்களை தாக்கி உள்ளதாக தெரிவித்தார். ஒரு வாரத்திற்கு முன்பே திட்டம் தீட்டி  வந்து தங்கி இருந்து எங்களை கடுமையாக தாக்கி உள்ளதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் காவல் துறையினர் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் 20க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்க கூடும் என தெரிவித்தவர், ஸ்டாலின் அரசுதான் எங்களது பல பேரின் உயிர்களை காப்பாற்றியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.  இதை சொல்வதற்கு எனக்கு எந்த கவலையும் இல்லையென்று கூறினார். பொன்னையன் பேசிய ஆடியோ போல் விரைவில் இன்னும் பல ஆடியோகள் வெளிவரும் என்றும் ஒரே நேரத்தில் அனைத்தையும் வெளியிட கூடாது என்று இருப்பதாவும்.விரைவில் ஒவ்வொன்றாக வெளியிட இருப்பதாக கூறினார். ஓ பன்னீர் செல்வம் விரைவில்  புரட்சி பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்றும் அவ்வாறு அவர் புரட்சி பயணம் மேற்கொள்ளும் போது எடப்பாடி பழனிசாமி உட்பட அவர்கள் பக்கம் உள்ள அனைவரும் சிறையில் இருப்பார்கள் என புகழேந்தி தெரிவித்தார்.


இதையும் படியுங்கள்

கருணாநிதிக்கு நன்றி தெரிவித்த குஷ்பு... என்ன காரணம் தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios