கருணாநிதிக்கு நன்றி தெரிவித்த குஷ்பு... என்ன காரணம் தெரியுமா?
அரசியலுக்கு அழைத்து வந்ததற்காக பாஜக செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அரசியலில் தீவிரம் காட்டிய குஷ்பு
பிரபல நடிகை குஷ்பு, இவருக்கு தமிழ் மட்டுமில்லாமல் பல்வேறு மொழிகளிலும் ரசிகர்கள் உண்டு அதிலும் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த ரசிகர்கள் குஷ்புவிற்கு கோயில் கட்டிய நிகழ்வு இந்திய திரை உலகத்தையே அதிசயத்து பார்க்க வைத்தது. அந்த வகையில் குஷ்புவிற்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு. திமுக தலைவராக இருந்த கருணாநிதி மீது கொண்ட ஈர்ப்பு காரணமாக திமுகவில் கடந்த 2010 ஆம் ஆண்டு இணைந்தார். திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனையடுத்து திமுகவில் உரிய அங்கீகாரம் கிடைக்காத காரணத்தால் திமுகவில் இருந்து விலகியவர் 2014 ஆம் ஆண்டு காங்கிரசில் இணைந்தார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியில் தேசிய செய்தி தொடர்பாளர் என்ற பதவியும் குஷ்புவிற்கு வழங்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொண்டவர் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்கும் என எதிர்பார்த்தார் . ஆனால் காங்கிரஸ் கட்சியில் உள்ள கோஷ்டி பூசல் காரணமாக சீட் கிடைக்காத காரணத்தால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.
கூட இருப்பவர்களே முதுகில் குத்த போறாங்க..! எடப்பாடி பழனிசாமியை அலர்ட் செய்யும் திமுக எம்.பி
கலைஞருக்கு நன்றி
சுமார் 6 வருடங்கள் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றிவர், 2020 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக்கொண்டார். இதனையடுத்து 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியில் தீவிரமாக பணியாற்றி வரும் குஷ்பு திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்தநிலையில் குரு பூர்ணிமாவையொட்டி டுவிட்டர் பதிவை ஒன்றை குஷ்பு வெளியிட்டுள்ளார். அதில் என்னை அரசியலுக்கு அழைத்து வந்து, மனிதாபிமானம், சமத்துவம், அரசியல் கருணை, சுயமரியாதையை விட சிறந்தது வேறு எதுவுமில்லை என்று சொல்லிக் கொடுத்த ஒருவருக்கு நன்றி சொல்ல வேண்டும் எனக்கூறியுள்ளவர், கருணாநிதிக்கு நன்றி தெரிவித்து அவருடன் எடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். பாஜக தீவிரமாக திமுகவை விமர்சித்து வரும் நிலையில் பாஜக நிர்வாகியான குஷ்பு கருணாநிதியின் புகைப்படத்தை பதிவிட்டது நன்றி தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்
தர்மயுத்தம் டூ என எந்த சீன் போட்டாலும் ஒரு பயனும் இல்லை..! ஓபிஎஸ்-ஐ சீண்டிய கோகுல இந்திரா