கூட இருப்பவர்களே முதுகில் குத்த போறாங்க..! எடப்பாடி பழனிசாமியை அலர்ட் செய்யும் திமுக எம்.பி
அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேசியதாக ஆடியோ வெளியான நிலையில், எடப்பாடி பழனிசாமி முதுகில் அவரது ஆதரவாளர்களே குத்த தயாராக இருப்பதாக திமுக எம்.பி. செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
பரபரப்பை ஏற்படுத்திய பொன்னையன் ஆடியோ
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஓபிஎஸ்யை நீக்கி இபிஎஸ்ம், இபிஎஸ்யை நீக்கி ஓபிஎஸ்ம் மாறி மாறி நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்தநிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இரு தரப்பினரும் போட்டி போட்டதால் அந்த அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அதிமுக கணக்கு கையாளும் வங்கிக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். அதில் தான் தான் பொருளாளர் என்றும், வேறு யாருக்கும் கணக்குகளை கையாள அனுமதி வழங்க கூடாது என தெரிவித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக பொதுக்குழுவில் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்தான் கணக்குகளை கையாள்வார் என கூறப்பட்டுள்ளது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் வங்கி நிர்வாகம் உள்ளது. இந்த பிரச்சனைகளுக்கு மத்தியில் அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சி.வி சண்முகத்தை பத்தி நான் அப்படி சொல்லவே இல்ல.. அவரு ரொம்ப துடிப்பான இளைஞர்.. அலறும் பொன்னையன்.!
திமுகவிற்கு ஆதரவாக அதிமுக நிர்வாகிகள்
அந்த ஆடியோவில் தொண்டர்கள் எல்லாம் இரட்டை இலை சின்னத்தின் பக்கம் உள்ளனர். தலைவர்கள் பணத்தின் பக்கம் உள்ளனர். அவரவர் பணத்தை பாதுகாப்பதற்காக போட்டி போட்டுக் கொண்டு டெல்லியை பிடித்துக் கொண்டு ஆடுகின்றனர் என தெரிவித்துள்ளார். மேலும் எடப்பாடி முதுகிலேயே எம்.எல்.ஏக்கள் குத்துகின்றனர். அதனாலேயே எம்.எல்.ஏக்கள் சொல்வதை எடப்பாடி பழனிசாமி கேட்கிறார். சி.வி சண்முகம் கையில் சாதி அடிப்படையில் 19 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். கொங்கு மண்டலத்தில் உள்ள 42 எம்.எல்.ஏக்களில் 9 எம்.எல்.ஏக்கள் மட்டுமே எடப்பாடி பழனிசாமி பக்கம் உள்ளனர் என தெரிவித்து அதிர்ச்சி அளித்தார். மேலும் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி மற்றும் தங்கமணி திமுகவை விமர்சித்து பேசிவது இல்லையென கூறியுள்ளார்.கே.பி .முனுசாமி திமுக அமைச்சர் துரைமுருகன் உதவியோடு கல்குவாரி டெண்டர் எடுத்துவிட்டதாகவும், இதன் மூலமாக மாதம் 2 கோடி அவருக்கு கிடைப்பதாக கூறினார். மேலும் ஒவ்வொரு மாவட்ட செயலாளர்குளக்கும் 100 கோடி சொத்து இருப்பதாக கூறினார்.
சி.வி.சண்முகம் கையில் இத்தனை எம்எல்ஏக்களா? அப்படினா இபிஎஸ் அவ்வளவுதானா.. பூதாகரமான பொன்னையன் ஆடியோ.!
எடப்பாடிக்கு துரோகம்
இந்தநிலையில், எடப்பாடி பழனிசாமியை எச்சரிக்கும் வகையில் திமுக எம்.பி. செந்தில் குமார் டுவிட்டர் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் நான் சொல்வதை பதிவு செய்து வைத்துக்கொள்ளுங்கள். இன்னும் பல நாடகங்கள் நடக்க போகிறது. வரும் நாட்களில், வரும் மாதங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர்களே அவரை மேலும் மேலும் முதுகில் குத்துவார்கள் என தெரிவித்துள்ளார். வாழ்க்கை ஒரு வட்டம். எது மேலே செல்கிறதோ அது கண்டிப்பாக கீழே வரும். அதுதான் இயற்கையின் விதி, என திமுக எம்.பி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
அதிமுகவில் இருந்து பொன்னையன் நீக்கமா..? இபிஎஸ்க்கு நெருக்கடி கொடுக்கும் முன்னாள் அமைச்சர்கள்