ஆட்டுக் குட்டி அண்ணாமலை என்று சொல்வதால் எனக்கு வருத்தம் இல்லை.. மாஸ் காட்டிய பாஜக மாநிலத் தலைவர் அதிரடி..
பலர் ஆட்டுக்குட்டி அண்ணாமலை என்று என்னை விமர்சிப்பதால் ஒரு போதும் வருத்தமில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பலர் ஆட்டுக்குட்டி அண்ணாமலை என்று என்னை விமர்சிப்பதால் ஒரு போதும் வருத்தமில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் ஊழல்வாதி என்றோ, பெண்களிடம் தவறாக நடந்து கொள்பவர் என்றோ, முதுகில் குத்துபவர் என்றோதான் பெயரெடுக்கக்கூடாது, ஆட்டுக்குட்டி என்று சொன்னால் தவறில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் முன்பிருந்ததை காட்டிலும் பாஜக மிக வேகமாக செயல்பட்டு வருகிறது என்ற தோற்றம் உள்ளது. பல்வேறு விஷயங்களில் அண்ணாமலை தொடர்ந்து கருத்து கூறி வருவதன் மூலம் பாஜகவை மக்கள் மத்தியில் உயிர்ப்புடன் வைத்துள்ள தலைவராக அவர் இருந்து வருகிறார். அதிலும் திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் அவர் வைத்து வரும் ஒவ்வொரு விமர்சனமும் பேசு பொருளாக மாறி வருகிறது. அண்ணாமலைக்கு பதில் சொல்ல வேண்டிய நெருக்கடிக்கு திமுக தள்ளப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் எதிர்க்கட்சியினர் அண்ணாமலை மீதும் பதிலுக்கு விமர்சனம் முன்வைத்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: கோவையில் பொதுமக்கள் இருக்கும் பகுதியில் குண்டு வெடித்திருந்தால் திமுக ஆட்சி டிஸ்மிஸ்..! அண்ணாமலை எச்சரிக்கை
அண்ணாமலை இன்னும் தன்னை போலீஸ் அதிகாரியாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார், அவர் அரசியல்வாதியைப் போல் இல்லை, அவர் கூறி வரும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என விமர்சித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ஆட்டுக்குட்டி அண்ணாமலை என்றும் பலர் அவரை கிண்டல் செய்து வருகின்றனர். இந்நிலையில்தான் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் பல்வேறு விஷயங்கள் குறித்து மனம்திறந்த பேட்டி கொடுத்துள்ளார். அப்பேட்டியில், கூறியுள்ள விவரங்கள் பின்வருமாறு:- அடுத்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல், அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும், எதிர்க்கட்சித் தலைவர் திருமாவளவனுடன் எங்களுக்கே பகையில்லை. அவரை நட்பு சக்தியாகவே பார்க்கிறோம்.
இதையும் படியுங்கள்: இந்தி தெரியாதா? தமிழக மீனவர்களை ஷூ காலால் எட்டி எட்டி உதைத்து கொடுமை.. இந்திய கடற்படை அக்கிரம. கொதிக்கும் வைகோ
அடிப்படையில் தமிழகத்தில் சாதியற்ற சமூகம் உருவாக வேண்டும் என அவர் பாடுபடுகிறார், அதே நோக்கத்திற்காகத் தான் நாங்களும் பாடுபடுகிறோம், எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் ஆனால் நோக்கம் ஒன்றுதான் அவர் மட்டும் இல்லை திமுக கூட்டணியில் இருந்து மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடனும் எங்களுக்கு பகையில்லை, எங்கள் பக்கமே அவர்கள் வரக்கூடாது என்று நாங்கள் ஒருபோதும் சொல்லவில்லை, நிலைமைகள் மாறும் போது எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றார். அப்போது பாஜக ஏன் தமிழகத்தில் இன்னும் பெரிய அளவில் மக்கள் மத்தியில் ஒன்றவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழகத்தில் அண்ணாதுரை, கருணாநிதி, ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் இருந்தனர்.
அப்போது பாஜகவால் எதுவும் செய்ய முடியவில்லை, அவர்களை எல்லாம் எதிர்த்து அரசியல் செய்வது என்பது சாமானியமான விஷயம் அல்ல, பாஜக தமிழகத்தில் அரசியல் செய்ய தொடங்கியதில் காலதாமதம் இருந்தது, ஆனால் தமிழகத்தில் தற்போது மக்களோடு ஒன்றும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் திமுக அதிமுக என்ற நிலை இருந்தது. தற்போது பாஜகவும் அவர்களுடன் ஒரு பங்காளி தான், மூவரும் ஒன்றாக பங்காளி சண்டை போடலாம் என்றார்.
அதேபோல் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு பாஜகவை தமிழகத்தில் கொண்டுவர வேண்டும் என்பதுதான் எனது முயற்சி. எனவே நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்றார், ஆட்டுக்குட்டி அண்ணாமலை என்று உங்களை அழைப்பதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ஊழல்வாதி, பெண்களிடம் தவறாக நடந்து கொள்பவர், முதுகில் குத்துபவர் என்றுதான் பெயர் எடுக்கக்கூடாது, ஆடு என்றுதானே கூறுகிறார்கள், ஆடு என்பது விவசாயத்தை சார்ந்தது தானே, அதனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை எனக் கூறினார்.