இது சந்தேகத்திற்கு இடமேயில்லாத சாதனைதான்!...
ஒரு முறை கவுன்சிலராவதே சகல சவாலான அரசியல் சூழ்நிலையில், மூன்று முறை எம்.பி.யாவதென்பது அசாத்தியமான காரியம். அதிலும் பல்வேறு அரசியல் கால்குலேஷன்களை மனதில் போட்டபடி காய் நகர்த்தும் எம்.எல்.ஏ.க்களின் வாக்குகளை வாங்கி தேர்தலில் வெற்றி பெற வேண்டிய நிலை இருப்பதென்பது சிக்கலான சவாலே. அதை அநாயசமாக தட்டி தகர்த்தெறிந்திருக்கிறார் ராஜிவ் சந்திரசேகர். 

சமீபத்தில் மாநிலங்களவையில் 58 காலி இடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் முப்பத்து மூன்று பேர் எந்த போட்டியும் இல்லாமல் தேர்வாகிவிட மீதியுள்ள இருபத்தைந்து கடந்த 23ம் தேதியன்று தேர்தல் நடைபெற்றது. மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு தேர்தல் நடந்தால் அதில் எம்.எல்.ஏ.க்கள்தான் வாக்காளர்கள். அவர்களின் மனம் கவர்ந்த வேட்பாளரே ஹிட்டடிப்பார் என்பது தெரிந்த ரகசியமே. 

இந்த சூழலில் கர்நாடகாவில் நடந்த தேர்தலில் நான்கு இடங்களுக்கு ஐந்து பேர் போட்டியிட்டனர். இதில் பி.ஜே.பி. சார்பில் ராஜிவ் சந்திரசேகர் களத்தில் நின்றார். ஐம்பது பி.ஜே.பி. எம்.எல்.ஏ.க்களின் அமோக ஆதரவை பெற்று தேர்தலில் வென்றார். இந்த வெற்றி குறித்து ராஜீவ் பேசுவதை விட, அவரை ஏன் தேர்ந்தெடுத்தோம் என்று பேசிய கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் ‘சரியான தேர்வுதான் என்றைக்குமே சரியான தீர்வாகவும் இருக்க முடியும். தண்ணீர் பஞ்சம், மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் என பல சிக்கல்களில் சிக்கி திணறுகிறது பெங்களூரு நகரம். அப்படியே கர்நாடகாவை ஜூம் செய்து பார்த்தால் ஒட்டு மொத்த மாநிலமும் ஓராயிரம் பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. 

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் ஆளும் காங்கிரஸை தூக்கி வீசிவிட்டு, ஆட்சி அமைத்து இந்த மாநிலத்தை காக்க பி.ஜே.பி. போராடுகிறது. அப்படியொரு சூழலில் ராஜீவ் போன்ற சேவை மனப்பான்மையுடைய எம்.பி.க்கள் களத்தில் இருந்தால்தான் கர்நாடகம் பிழைக்கும். அதனாலேயே!அவரை தேர்ந்தெடுத்தோம்.” என்றனர். 

இப்படி பொதுநல நோக்கோடு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.யான ராஜிவ் சந்திரசேகர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். ஏற்கனவே மாநிலங்களவையில் சாமான்ய மனிதனின் பிரச்னைக்கான குரல்களை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் ராஜீவ் சந்திரசேகர் இனியும் தொடர்ந்து அப்படியான கடமைகளை களைப்பில்லாமல் ஆற்றுவார் என்றே  நம்புகிறோம்! என்கிறார்கள் சக பி.ஜே.பி. எம்.பி.க்கள். 

”என்னுடைய வெற்றியின் மூலம் பெங்களூரு, கர்நாடகா மற்றும் ஒட்டுமொத்த தேசத்தின் வளர்ச்சிக்கு உழைக்கும் ஒரு எம்.பி.க்கான குரல் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது!” என்று சிலிர்த்திருக்கும் ராஜீவ் சந்திரசேகருக்கு புன்னகை மிளிர ஒரு பூங்கொத்து!
கலக்குங்க சார்!