மறைந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வசந்தகுமார் எம்.பி. புகைப்படத் திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்படாதது  குறித்து கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார். 

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் கடந்த 28-ம் தேதி காலமானார். அவருடைய உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நேற்று அவருடைய சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தமிழக காங்கிரஸ் கட்சியின் சீனியர், எம்.பி., என்பதால் அவருடைய புகைப்படத்திறப்பு விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி., தயாநிதி மாறன் எம்.பி., தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சி.டி. மெய்யப்பன், சா. பீட்டர் அல்போன்ஸ், உ. பலராமன், கு.செல்வப்பெருந்தகை, டி.என். முருகானந்தம், ஆ.கோபண்ணா,  கே.சிரஞ்ஜீவி, டி. செல்வம், கீழானூர் ராஜேந்திரன், பொன். கிருஷ்ணமூர்த்தி, மாவட்டத் தலைவர்கள் சிவராஜசேகரன், எம்.எஸ். திரவியம், கே.வீரபாண்டியன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


இந்த நிகழ்வின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டன. இந்தப் புகைப்படங்களைக் குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, "உயர்வான செயல். ஆனால், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டுப் பிரிவில் யாருக்குமே இது பற்றிய தகவல் சொல்லப்படவில்லை. தமிழகத்தில் இருக்கும் ஒரே தேசிய செய்தித் தொடர்பாளர் நான்தான். ஆனால் நான் இந்தத் தகவலைச் செய்தித்தாள்கள் மூலமாகத் தெரிந்து கொள்கிறேன். நாம் நம் வலிமையை அதிகரிக்க வேண்டும். நமது பாதுகாப்பற்ற மனநிலை, அகந்தை (ஈகோ) காரணமாக பலவீனமாக்கக் கூடாது. எப்போது அதைச் செய்வோம்?’’என அவர் விமர்சித்துள்ளார்.

ஏற்கெனவே காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருக்கும் குஷ்பு அந்தக் கட்சியை விட்டு விலகி பாஜகவில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.