Asianet News TamilAsianet News Tamil

விவசாயத்தை பத்தி தெரியாத நீயெல்லாம் பேசக்கூடாது... ஸ்டாலினை பங்கம் செய்த எடப்பாடியார்..!

3 வேளாண் மசோதாக்களிலும் விவசாயிகளுக்கு ஆதரவான அம்சங்கள் இருந்ததால் அதிமுக ஆதரவு அளித்தது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.

I am proud to be a farmer...Edappadi Palanisamy retaliated against Stalin
Author
Ramanathapuram, First Published Sep 22, 2020, 2:26 PM IST

3 வேளாண் மசோதாக்களிலும் விவசாயிகளுக்கு ஆதரவான அம்சங்கள் இருந்ததால் அதிமுக ஆதரவு அளித்தது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் மாவட்ட வளர்ச்சி பணி, கொரோனா தடுப்பு பற்றி ஆலோசித்த பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது, ராமநாதபுரம் மாவட்டத்தில் 2,617 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.  ராமநாதபுரத்தில் கொரோனா பரவல் குறைக்கப்பட்டுள்ளது.  மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்வர் குறைதீர்ப்பு திட்டத்தில் பெறப்பட்ட 9,302 மனுக்களில் 5,180 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் ரூ.345 கோடியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனை அமைய உள்ளது. 

I am proud to be a farmer...Edappadi Palanisamy retaliated against Stalin

நான் விவசாயிதான்; திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்குத்தான் விவசாயம் என்றால் என்னவென்று தெரியாது. அதிமுக ஆட்சியில் திமுக தலைவர் ஸ்டாலினால் எந்த குறையையும் கண்டுபிடிக்க முடியவில்லை. மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களை கொண்டுவர முனைப்பு காட்டியவர் திமுக தலைவர் ஸ்டாலின். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்தவர் மு.க.ஸ்டாலின்தான்.

I am proud to be a farmer...Edappadi Palanisamy retaliated against Stalin

3 வேளாண் மசோதாக்களிலும் விவசாயிகளுக்கு ஆதரவான அம்சங்கள் இருந்ததால் அதிமுக ஆதரவு அளித்தது. விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அதிமுக எதிர்க்கும்.  வேளாண் மசோதாவை மாநிலங்களவையில் எதிர்த்து பேசியது குறித்து அதிமுக எம்.பி. எஸ்.ஆர்.பாலசுப்ரமணியனிடம் விளக்கம் கேட்கப்படும். கோட்டையில் பாஜக கொடி பறக்கும் என எல்.முருகன் கூறியது பற்றிய கேள்விக்கு, ‘அதிமுக ஆட்சியே தொடரும்’ என  முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios