நான் வெறும் ட்ரெய்லர்தான், மெயின் பிக்சர் தலைவர் ஸ்டாலின்தான் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் தேர்தல் முகவர்கள் கூட்டமும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார். “கருணாநிதி பிறந்த திருக்குவளையில் பிரச்சாரத்தை தொடங்கிய நாளிலேயே நான் கைது செய்யபட்டேன். பிரச்சாரத்துக்காக கைது செய்யப்பட்டபோது மறைந்த கருணாநிதி இருந்திருந்தால் பெருமைப்பட்டிருப்பார். அதிமுக அரசின் தொடர் கைதால்தான் என்னுடைய பிரசாரம் பெரிய எழுச்சி பெற்றது.
தன்னுடைய பிரசாரத்திற்கு பெரிய விளம்பரத்தை ஏற்படுத்தி தந்த முதல்வருக்கும் அதிமுக அரசுக்கும் மிகப்பெரிய நன்றி. நான் வந்ததற்கே எழுச்சி என்றால், திமுக தலைவர் வந்தால் என்ன ஆகும்? நான் வெறும் ட்ரெய்லர்தான், மெயின் பிக்சர் தலைவர் ஸ்டாலின்தான். விரைவில் ஆட்சி மாற்றம் வரப்போகிறது. திமுகதான் ஆட்சி அமைக்கப்போகிறது” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 5, 2021, 8:59 PM IST