சத்யாவுக்கு நடந்த துயரத்தால் மனவேதனையில் இருக்கிறேன்.. இனி எந்த பெண்ணும் இது நடக்ககூடாது: முதல்வர் உருக்கம்

சத்யா என்ற மாணவிக்கு நடந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் , மனவேதனையில் இருப்பதாகவும் இனி எந்த ஒரு பெண்ணுக்கும் இதுபோன்ற சம்பவம் நடக்கக்கூடாது  என்றும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உருக்கமாக தெரிவித்துள்ளார். இயற்கையில் ஆண் வலிமை உள்ளவனாக இருக்கலாம் ஆனால் அந்த வலிமை பெண்களை அடக்குவதற்காக அல்ல  அவர்களைக் காப்பதற்காக என்றும் அவர் கூறியுள்ளார்.

I am heartbroken by the tragedy of Sathya.. This should not happen to any woman again: Chief Minister stalin

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் சத்யா என்ற கல்லூரி மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்த சதீஷ்  என்ற இளைஞர் அம்மாணவியை ரயிலில் தள்ளி படுகொலை செய்தார். இந்தக் கொலை ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது.  இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மகள் சத்யாவின் மரணச் செய்தி கேள்விப்பட்ட அவரது தந்தை, மாணிக்கம் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஒட்டுமொத்த தமிழகத்தையும் இது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்நிலையில்தான் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், மாணவி சத்யாவின் மரணத்தை மேற்கோள்காட்டி தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

I am heartbroken by the tragedy of Sathya.. This should not happen to any woman again: Chief Minister stalin

இதையும் படியுங்கள்: எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்.. என்ன செய்யப்போகிறார் ஓபிஎஸ்?

சென்னை ராயப்பேட்டையில் சென்னை மாவட்ட நிர்வாகம்  மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தியது. நியூ கல்லூரியில் நடைபெற்ற இந்த முகாமில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு ஒரு லட்சமாவது பணி நியமன ஆணைகளை வழங்கினார். பின்னர் மேடையில் உரையாற்றினார், அப்போது,  அப்துல்கலாமின் பிறந்த நாளில் 1 லட்சமாவது வேலைவாய்ப்பு ஆணையை வழங்கியதில் மகிழ்ச்சி,  இதைவிட ஒரு மகிழ்ச்சியை அரசாங்கத்தை நடத்துபவர்களுக்கு வேறு என்ன கிடைத்துவிடப் போகிறது.

இதையும் படியுங்கள்: சனாதன தர்மம், இந்து மதம் குறித்த ஆளுனரின் பேச்சுகள் RTI-ல் வராது.. ஆளுநர் மாளிகை பதில்.

கொரோனா காலத்தில் வேலை வாய்ப்பு இல்லை, ஆக்சிஜன் இல்லை, மருத்துவமனையில் இடமில்லை ஆனால் நாங்கள் எல்லாரும் மருத்துவராக மாறியதால் கொரோனாவை கட்டுப்படுத்த முடிந்தது. ஒவ்வொருவருக்கும் திறமைக்கு ஏற்ற வேலைவாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். தனியார் நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி இருக்கிறது, இதுதான் உண்மையான சமூக நீதி இது என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சி என்றார். தொடர்ந்து பேசிய அவர், சென்னையில் சத்யா என்ற மாணவிக்கு நடந்த துயரத்தை கண்டு நான் மிகுந்த மன வேதனை அடைந்து இருக்கிறேன். இனி எந்த ஒரு பெண்ணுக்கும் இது போன்ற ஒரு சம்பவம் நடக்கக் கூடாது.

I am heartbroken by the tragedy of Sathya.. This should not happen to any woman again: Chief Minister stalin

அதற்கு தங்கள் பிள்ளைகளை ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அறிவாற்றல் மிக்கவராகவும், தனி திறமையும், சமூக நோக்கமும், பரந்த மனப்பான்மை கொண்டவர்களாகவும் பெற்றோர்கள் அவர்களை வளர்க்க வேண்டும். பாடபுத்தகம் மட்டுமின்றி சமூக கல்வி மாணவர்களுக்கு அவசியம். நல்ல ஒழுக்கமும் பண்பும் கொண்டவர்களாக மாணவர்கள் வாழ வேண்டும், ஆண் வலிமை படைத்தவர்களாக இருக்கலாம் அது பெண்களைக் அடக்குவதற்காக அல்ல அவர்களைப் பாதுகாப்பதற்காக. இவ்வாறு அவர் கூறினார். 
 
Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios