முன்னதாக இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த அவர், கல்விக்கூடம் என்பது மத அடையாளங்களை காட்டும் இடம் அல்ல. இந்தியராக வலிமையை காட்ட வேண்டிய இடம். இதைவைத்து அரசியல் செய்பவர்கள் அவமானத்திற்குரியவர்கள். கல்வி என்பது மதத்தைப் பற்றியது அல்ல, அது சமத்துவத்தைப் பற்றியது. பள்ளிக்கு யூனிபார்ம் அணிந்து வர வேண்டும் என்பது அனைவருக்கும் பொதுவான ரூல்ஸ்.
நானும் இஸ்லாமிய பெண் தான் ஆனால் எனது மகள்களுக்கு நான் ஒருபோதும் நிஜாப் அணியவில்லை, நானும் பளிக்குக் சென்றபோது நிஜாப் அணியவில்லை என நடிகையும், பாஜக செயற்குழு சிறப்பு அழைப்பாளராக குஷ்பு தெரிவித்துள்ளார். பள்ளிக்கூடம் என்றால் யாராக இருந்தாலும் அங்கு சீருடை தான் அணிய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் இஸ்லாமியர்களை சீண்டும் வகையிலான சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் முஸ்லிம் மாணவிகள் பள்ளிக்கூடங்களில் ஹிஜாப் அணிய கூடாது என கர்நாடக மாநிலத்தில் எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது. இந்துத்துவ அமைப்பை சேர்ந்த மாணவர்கள் இஸ்லாமிய மாணவியர் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பள்ளிக்கூடங்கள் என்பது மதத்தை வெளிக்காட்டும் இடம் கிடையாது, மதத்தை காட்ட வேண்டுமென்றால் அதை அவர்கள் வீட்டில் வைத்துக் கொள்ளட்டும், எல்லோரும் பள்ளிக்கூடத்திற்கு சீருடைதான் அணிந்து வரவேண்டும் எல்லோருக்கும் யூனிஃபார்ம் கொடுக்கப்பட்டுள்ளது. எல்லோருக்கும் விதிமுறை ஒன்றுதான், அவர்கள் யூனிபார்ம் அணிந்து கொண்டுதான் வகுப்பிற்கு வர வேண்டும், அவர்களின் ஹிஜாப் அணிந்தால் நாங்களும் காவி துண்டு அணிந்து பள்ளிக்கூடத்திற்கு வருவோம் என இந்துத்துவ மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த போராட்டம் கர்நாடக மாநிலத்தில் உடுப்பி, சிக்மங்களூர், மங்களூர், சிவமொக்கா என பல்வேறு மாவட்டங்களுக்கு பரவியுள்ளது. இந்நிலையில்தான் கடந்த சில தினங்களுக்க முன்பு மாண்டியாவில் உள்ள பியூசி கல்லூரிகள் ஹிஜாப் தடைக்கு ஆதரவாக நேற்று இந்து அமைப்பு மாணவர்கள் காவி கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். அப்போது இஸ்லாமிய மாணவி ஒருவர் ஹிஜாப் அணிந்து இருசக்கர வாகனத்தில் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்தார். அப்போது போராட்டம் நடத்திக்கொண்டிருந்த மாணவர்கள் அந்த பெண்ணை பின்தொடர்ந்து ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் என முழக்கமிட்டனர். அப்போது அந்த மாணவி இந்துத்துவா மாணவர்களை எதிர்த்து நின்று அல்லாஹு அக்பர் என பதிலுக்கு முழங்கினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சுயநலத்திற்காக மாணவர்களிடம் அரசியலை புகுத்துவது நியாயமில்லை என்று பலரும் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர்.
ஹிஜாப் எங்கள் உரிமை, இதை எவரும் தடுக்க முடியாது என இஸ்லாமிய பெண்கள் மாணவிகள் முழங்கி வருகின்றனர். இதில் பலரும் பல வகைகளில் கருத்து கூறி வரும் நிலையில், பாஜகவின் தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் குஷ்பூ சுந்தர், ஹிஜாப்புக்கு எதிராக காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, பள்ளிக்கூடத்திற்கு போகும்போது அங்கு சீருடை அணிய வேண்டுமென்று விதி இருக்கிறது. இஸ்லாமிய பெண்கள் மாணவிகள் ஹிஜாப் அணியலாம், பள்ளிக்கூட கேட் வரை அதை அணிந்து கொள்ளலாம், ஆனால் வகுப்பறைக்கு செல்லும் போது எந்த சாதி அடையாளமும், மத அடையாளமும் இன்றி சீருடை அணிந்து செல்ல வேண்டும். பள்ளிக்கூட விதிமுறையின்படி யாராக இருந்தாலும் அவர்கள் சீருடைய அணிந்துதான் செல்ல வேண்டும். எனது பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பும்போது அவர்களுக்கு இஸ்லாமிய நண்பர்கள் இருக்கிறார்கள், நானும் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவள்தான் ஆனால் நான் இதுவரை ஹிஜாப் அணிந்தது இல்லை.

என்னுடைய தோழர்கள் யாரும் ஹிஜாப் அணிந்து வந்தது இல்லை. பள்ளிக்கூடம் வரை ஹிஜாப் உடன் வந்து பள்ளிக்கூடத்திற்கு உள் போகும்போது சீருடையில் செல்வோம். நாங்கள் ஹிஜாப் அணிந்து தான் வருவோம் என சிலர் அடம்பிடிக்கும் போதுதான் சில குழந்தைகள் காவி துண்டு அணிந்து கொண்டு பள்ளிக்கூடத்திற்கு வருவோம் என அடம்பிடித்துள்ளனர். ஹிஜாப் போடுவதும் தவறு, காவி துண்டு போடுவதும் தவறு, இரண்டுமே தவறு என கூறியுள்ளார்.
முன்னதாக இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த அவர், கல்விக்கூடம் என்பது மத அடையாளங்களை காட்டும் இடம் அல்ல. இந்தியராக வலிமையை காட்ட வேண்டிய இடம். இதைவைத்து அரசியல் செய்பவர்கள் அவமானத்திற்குரியவர்கள். கல்வி என்பது மதத்தைப் பற்றியது அல்ல, அது சமத்துவத்தைப் பற்றியது. பள்ளிக்கு யூனிபார்ம் அணிந்து வர வேண்டும் என்பது அனைவருக்கும் பொதுவான ரூல்ஸ். அதை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் பதிவிட்டுள்ளார். குஷ்புவின் இந்த கருத்தை பலரும் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் விமர்சித்து வருகின்றனர்.

இதேநேரத்தில் கர்நாடக மாநில அரசும் யாராக இருந்தாலும் பள்ளிக்கு ஒரே சீருடையில் தான் வரவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதாவது மாணவர்கள் யூனிபார்ம் மட்டும் தான் அணிய வேண்டும் வேறு உடையில் வரக்கூடாது என மாநில அரசு திட்டவட்டமாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
