தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி தொடக்க விழா மற்றும் தனி தெலுங்கானா மாநிலம் உதயமான விழா ஆகிய இருபெரும் விழாவை சிறப்பிக்கும் விதமாக ரங்காரெட்டி மாவட்டத்தில் முதலமைச்சர்  சந்திரசேகர ராவ் தலைமையில் நேற்று  பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

இந்நிலையில் தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில்  காவல் துணை ஆணையராக இருப்பவர்  ஏ.ஆர்.உமாமகேஸ்வர சர்மா. இவர் அடுத்த  ஆண்டு ஓய்வு பெறவுள்ளார். இவரது மகள், சிந்து சர்மா ஐ.பி.எஸ்., தேர்ச்சி பெற்று இதே  மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருகிறார்.

இருவரும் நேற்று நடைபெற்ற தெலுங்கானா ராஸ்டிரிய சமிதியின் மாபெரும் பேரணியில் பணி நிமித்தமான முதன் முறையாக சந்திக்க நேர்ந்தது. அப்போது, தந்தைமகளுக்கு சல்யூட் அடித்தார்.

இதைத் தாம் பெருமையாகக் கருதுவதாகவும், வீட்டில்தான் தாங்கள் வழக்கமான அப்பா-மகளே தவிர, பணியில் தன் மகள் தமக்கு உயரதிகாரிதான் என்பதால் உரிய மரியாதை அளித்ததாக உமாமகேஸ்வர சர்மா தெரிவித்தார்.

 

அதே நேரத்தில் இந்த நிகழ்வு  தமக்கு பெருமையான தருணம் என அவரது மகளும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநில கால்துறையினர் மத்தியில் இந்த நிகழ்ச்சி பெரு மதிப்புடன் பேசப்பட்டு வருகிறது.