முதல்வர் நிகழ்ச்சியை காண ஆபத்தான பயணம்… வைரலாகும் புகைப்படம்!!
திருப்பத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையை காணவும் அவரது நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளவும் நூற்றுக்கணக்கான மக்கள் அபாயகரமான பயணங்களை மேற்கொண்டனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
திருப்பத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையை காணவும் அவரது நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளவும் நூற்றுக்கணக்கான மக்கள் அபாயகரமான பயணங்களை மேற்கொண்டனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. புதியதாக பிரிக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தில் 110 கோடி ரூபாய் நிதியில் புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. அதனை திறந்து வைக்கவும் பல புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவும் இன்று திருப்பத்தூருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை புரிந்தார்.
இதையும் படிங்க: திமுகவுடன் உறவாடும் ஓபிஎஸ்.. தூணாக செயல்படும் எஸ்.பி வேலுமணிக்கு வைத்த ஆப்பு.. அலறிய சி.வி சண்முகம்.
பின்னர் ஆட்சியர் அலுவலகத்தை திறந்து ரிப்பன் வெட்டி முதலமைச்சர் திறந்து வைத்தார். முன்னதாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் குத்து விளக்கேற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் சிறிது நேரம் அமர்ந்தார்.
இதையும் படிங்க: மத அடிப்படையிலான தீவிரவாதத்தை ஒடுக்குங்க.. இந்து இளைஞர் கொலைக்காக கொதித்த அமைச்சர் மனோ தங்கராஜ்.
அத்துடன், புதிய ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றை நட்டார். அதன் பிறகு, திருப்பத்தூர் தனியார் பள்ளி வளாகத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள நூற்றுக்கணக்கான மக்கள் சரக்கு வாகனங்களில் திருப்பத்தூருக்கு பயணம் மேற்கொண்டனர். அபாயகரமான பயணங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில் மக்கள் இவ்வாறு முதல்வர் நிகழ்ச்சிக்கு அபாயகரமான பயணம் மேற்கொள்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.