திமுகவுடன் உறவாடும் ஓபிஎஸ்.. தூணாக செயல்படும் எஸ்.பி வேலுமணிக்கு வைத்த ஆப்பு.. அலறிய சி.வி சண்முகம்.
திமுகவுடன் உறவாடி அதிமுகவுக்கு துரோகம் செய்கிறார் ஓ. பன்னீர்செல்வம் என அதிமுக முன்னாள் அமைச்சர், மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார். திமுகவை தூண்டிவிட்டு எஸ்.பி வேலுமணி மீது பழி வாங்கும் நடவடிக்கையில் ஓபிஎஸ் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
திமுகவுடன் உறவாடி அதிமுகவுக்கு துரோகம் செய்கிறார் ஓ. பன்னீர்செல்வம் என அதிமுக முன்னாள் அமைச்சர், மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார். திமுகவை தூண்டிவிட்டு எஸ்.பி வேலுமணி மீது பழி வாங்கும் நடவடிக்கையில் ஓபிஎஸ் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமியை நியமிப்பதற்கான ஏற்பாடுகளில் அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், இரட்டை தலைமையே நீடிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதனால் அதிமுக ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையில் இரண்டாக பிளவுபட்டுள்ளது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தீவிர ஆதரவாளரான முன்னாள் அமைச்சர், இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி சண்முகம் ஓ.பன்னீர் செல்வத்தின் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
இதையும் படியுங்கள்: துணை குடியரசு தலைவர் தேர்தல் எப்போது? அறிவித்தது தலைமை தேர்தல் ஆணையம்!!
சென்னை பசுமை வழி சாலையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி இல்லம் முன்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு காலம் நிறைவு பெற்றுள்ளது. உள்துறையை தன் கையில் வைத்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின், ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொலை கொள்ளை கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் கட்டுப்படுத்த முடியாமல் இருந்து வருகிறார். கஞ்சாவின் தலைநகரமாக சென்னை மாறியுள்ளது. ஆன்லைன் ரம்மி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் தடைசெய்யப்பட்டது, அவரால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு மீண்டும் தலைதூக்கியுள்ளது.
இதையும் படியுங்கள்: gst council meeting: gst:மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: பிடிஆர் அழைப்பை ஏற்றார் நிர்மலா சீதாராமன்
இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் துணை போகிறார். மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கட்டுப்படுத்த அரசு லஞ்ச ஒழிப்பு சோதனை மேற்கொண்டு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அதிமுக உட்கட்சி பிரச்சனையில் எஸ்.பி வேலுமணி தூணாக இருந்து செயல்பட்டு வருகிறார் எனவே அவரை அடி பணிய வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு திமுகவுடன் உறவாடி அதிமுவினருக்கு துரோகம் செய்து வருகிறார் பன்னீர்செல்வம். அவரின் தூண்டுதலின் பேரில் எஸ்.பி வேலுமணி நடத்திவரும் இலவச ஐஏஎஸ் அகாடமியில் கடந்த மூன்று தினங்களாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
திமுகவுடன் உறவாடும் ஒரு நபர் என ஓ.பன்னீர் செல்வத்தை குறிப்பிட்டு கூறியதோடு, தற்போது காவல்துறையும் லஞ்ச ஒழிப்புத் துறையும் திமுகவின் தொண்டர் படையாக செயல்பட்டு வருகிறது என சிவி சண்முகம் குற்றம் சாட்டினர். எதிர்வரும் அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி எழுச்சியுடன் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.