துணை குடியரசு தலைவர் தேர்தல் எப்போது? அறிவித்தது தலைமை தேர்தல் ஆணையம்!!

துணை குடியரசுத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 

vice presidential election date hadbeen announced by chief electoral officer

துணை குடியரசுத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனயொட்டி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இந்த தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக திரௌபதி முர்முவும், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் முர்மு ஏற்கனவே வேட்புமனுத் தாக்கல் செய்த நிலையில், அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார்.

இதையும் படிங்க: குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு கிராமத்துக்கு, இப்போ தான் மின்சார வசதி கிடைக்குது !

vice presidential election date hadbeen announced by chief electoral officer

அதேபோல் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா கடந்த 27 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்தார். இந்த நிலையில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் அந்த பதவிக்கான தேர்தலையும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. துணை குடியரசுத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.

இதையும் படிங்க: சொந்த கிராமத்துக்கே மின்சாரம் கொடுக்காத திரெளபதி பழங்குடியினருக்கு என்ன செய்வார்.? சந்திரசேகரராவ் கட்சி கேள்வி

vice presidential election date hadbeen announced by chief electoral officer

அதன்படி ஆகஸ்ட் 6 ஆம் தேதி துணை குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 5 ஆம் தேதி மனுத்தாக்கல் தொடங்கும் எனவும் வேட்பாளர்கள் வேட்புமனுவைத் தாக்கல் செய்ய ஜூலை 19 ஆம் தேதி கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 20 ஆம் தேதி வேட்புமனு மீது பரிசீலனை நடைபெறும் எனவும் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற ஜூலை 22 கடைசி தினம் எனவும் இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு முடிந்த உடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியக் குடியரசுத் தலைவா் தோ்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios