தீண்டாமைக்கு எதிராக ஜனவரி மாதத்தில் மனிதநேய வார விழா... முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்!!
ஆதி திராவிடர்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க நான்கு தனி சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளதுதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆதி திராவிடர்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க நான்கு தனி சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளதுதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் பேசிய முதலவர் மு.க.ஸ்டாலின், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு எதிரான வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தீண்டாமைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த மனிதநேய வார விழா நடத்தப்படும்.
இதையும் படிங்க: முதலில் தமிழ்நாடு, அடுத்து தெலுங்கானா.. திடீரென 3 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் - பரபர பின்னணி
ஆதிதிராவிடர் நலத்துறையின்கீழ் உள்ள 366 விடுதிகளில் ரூ.225 கோடியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். ரூ.135 கோடியில் பழங்குடியின கிராமங்களில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும். வீடற்ற பழங்குடியினருக்கு வீடுகள் வழங்க ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு, நீலகிரியில் பழங்குடியினர் தொழில் தொடங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கர்நாடக தேர்தல்: வெளியானது 189 பேர் கொண்ட முதற்கட்ட பாஜக வேட்பாளர்கள் பட்டியல்!!
திராவிட மாடல் அரசாக திமுக அரசு செயல்பட்டுவருகிறது. அனைத்தையும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக திமுக அரசு உள்ளது. நிதி ஒதுக்கீடுகளால், தொலைநோக்குப் பார்வையால், கண்காணிப்பால் மற்ற வளர்ச்சிகளை நாம் எட்டிவிடலாம். ஆனால் சமூக வளர்ச்சியும் சிந்தனை வளர்ச்சியும் அப்படிப்பட்டது அல்ல. அது மக்கள் மனங்களில் உருவாக வேண்டும். மக்கள் மனதில் மனமாற்றங்கள் ஏற்படவேண்டும என்று தெரிவித்துள்ளார்.