கர்நாடக தேர்தல்: வெளியானது 189 பேர் கொண்ட முதற்கட்ட பாஜக வேட்பாளர்கள் பட்டியல்!!
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 189 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டு உள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 189 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டு உள்ளது. 2 ஆம் கட்ட வேட்பாகர்நாடக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் 189 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டு உள்ளது. கர்நாடகாவில் தற்போது நடைபெற்று வரும் பாஜக அரசின் பதவிகாலம் அடுத்த மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதை அடுத்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அம்மாநிலத்துக்கு மே.10 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவித்தது. மே.13 வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: முதலில் தமிழ்நாடு, அடுத்து தெலுங்கானா.. திடீரென 3 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் - பரபர பின்னணி
இதை அடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பாஜகவின் தலைவர்கள் கர்நாடகாவில் முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதுஒருபுறம் இருக்க மறுபுறம் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் உள்ள 224 தொகுதிகளில், 166 இடங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் ஏற்கனவே வெளியிட்டிருந்தது.
இதையும் படிங்க: இனி நாட்டு நாட்டு கிடையாது.. “மோடி மோடி தான்” - கர்நாடக தேர்தல் பிரச்சார பாடலை வெளியிட்ட பாஜக
இந்த நிலையில் 189 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டுள்ளது. அதன்படி 224 தொகுதியில் 189 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில், 52 புதிய வேட்பாளர்களும் 32 இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் 30 பேர் பட்டியல் சமூகத்தினர் என்றும் கூறப்படுகிறது. 16 பழங்குடியினர்களுக்கு பாஜக வாய்ப்பு அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பட்டியலில் 8 பெண் வேட்பாளர்களும் இடம்பெற்றுள்ளனர். இதனிடையே இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் பாஜக தலைமை தெரிவித்துள்ளது.