தொடர்ந்து சர்ச்சை பேச்சை பேசி மக்களை முகம் சுழிக்க வைக்கும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தற்போது தொலைக்காட்சி உரிமையாளர்கள் குறித்து சர்ச்சை பேச்சு பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் மதத்தை தூக்கி பிடித்து கொண்டு ஆடுபவர்களில் முதல் ஆள் யார் என்று சின்ன குழந்தையை கேட்டால் கூட சொல்லி விடும் அது ஹெச்.ராஜா தான் என்று. 

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பேசும் அத்தனை மேடைகளிலும் பேட்டிகளிலும் மற்ற மதத்தினரை புண்படுத்தாமலும் தன்னுடைய மதத்தை தூக்கி பிடிக்காமலும் பேசாமல் இருந்ததே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். 

சில நாட்களுக்கு முன்பு கூட கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து சர்ச்சை பேச்சை பேசியதாக கூறி பொதுமேடை என்று கூட பார்க்காமல் ஹெச்.ராஜா வைரமுத்துவை தரக்குறைவாக பேசினார். 

அது பலராலும் விமர்சிக்கப்பட்டது. மேலும் கண்டனங்களும் எழுந்தன. பேட்டி கொடுக்கும்போது கூட செய்தியாளர்கள் ஏதேனும் கேள்வி எழுப்பி அதற்கு பதிலளிக்க முடியவில்லை என்றால் உடனே அவரை பார்த்து ’you are a anti indian' என்று கூறிவிட்டு தப்பித்து ஓடிவிடுவார். 

ஆனாலும் செய்தியாளர்கள் மடக்கி மடக்கி கேள்வி எழுப்புவார்கள். இந்நிலையில் தற்போது ஹெச்.ராஜா தொலைக்காட்சி உரிமையாளர்கள் பற்றி பேசிய சர்ச்சை வீடியோ வலைதளங்களில் உலாவருகிறது. 

அதில் செய்தியாளர் ஏதோ கேள்வி எழுப்புகிறார். அதற்கு அவர் தொலைக்காட்சி உரிமையாளர்கள் அத்தனை பேரும் அழுகியே சாவார்கள் எனவும் நான் சொல்வது சரிதானே எனவும் கேள்வி எழுப்புகிறார். இந்த வீடியோ மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.