H.Raja comment

தன் வீட்டில் நடக்க இருக்கும் ரெய்டு குறித்து தெரியாத ஜோசியரிடம் ஆலோசனைக் கேட்பது எவ்வளவு ஆபத்தானது இவ்வவாவது புரிந்திருக்கும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். சசிகலாவின் ஜோசியரிடம் நடத்தப்படும் வருமான வரித்துறை சோதனை குறித்து ஹெச். ராஜா இவ்வாறு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சசிகலாவின் அண்ணன் மகனான விவேக் ஜெயராமனுக்குச் சொந்தமான, சென்னை, கிண்டியில் உள்ள ஜாஸ் சினிமாஸ், சசிகலா குடும்பத்துக்கு சொந்தமான மிடாஸ் மது ஆலைகள், ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் பத்திரிகை என பல்வேறு இடங்களில் ஐடி ரெய்டு நேற்று காலை முதல் நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 187 இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் 40 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையை முடித்துக் கொண்டதாகவும், மீதமுள்ள 147 இடங்களில் தொடர்ந்து 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சசிகலா மற்றும் தினகரனின் ஆஸ்தான ஜோதிடரான கடலூரைச் சேர்ந்த ஜோதிடர் சந்திரசேகரின் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை தொடங்கிய இந்த சோதனை இரவு முழுதும் நடைபெற்று இன்று காலையும் தொடர்ந்தது.

சசிகலாவின் ஜோதிடர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தி வரும் சோதனை குறித்து பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா டுவிட்டரில் தனது கருத்தொன்றை பதிவிட்டுள்ளார். அதில், தன் வீட்டில் ரெய்டு நடக்கும் என்று தெரியாத ஜோஸ்யரிடம் ஆலோசனைக் கேட்பது எவ்வவு ஆபத்தானது என்று இப்பவாவது புரிந்திருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

ஹெச். ராஜாவின் இந்த டுவிட்டர் பதிவுக்கு நெட்டிசன்கள் பல்வேறு விதமாக பதிலை பதிவிட்டுள்ளனர். அதாவது ஹெச். ராஜாவை கலாய்க்கும் விதமாகவே டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.