இந்திய தேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி பதியப்பட்டு ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று காலை கொடியேற்றி தொண்டர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். 

அப்போது பேசிய அவர், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவராக தான் செயல்படுவதாகவும்,துணை தலைவராக பேராசிரியர் ஞானசம்பந்தனையும், பொதுச்செயலாளராக அருணாச்சலத்தையும், பொருளாளராக சுரேஷையும் அறிவித்தார்.

நிகழ்ச்சியின் இடையே, சட்டமன்ற பொறுப்பாளர்கள் பட்டியலை அறிவித்தார். மேலும் உயர்நிலைக்குழு கலைக்கப்படுவதாகவும், அவர்கள் 11 பேரும் செயற்குழுவில் செயல்படுவார்கள் என்றும் கூறினார். மண்டலக்குழு இன்னும் அமைக்கப்படவில்லை என்றார். மாவட்ட நிர்வாகிகளை அறிவித்த அவர், சில  மாவட்டங்களுக்கு விரைவில் நிர்வாகிகள் அறிவிக்கப்படுவார்கள் என்றார்.

மேலும், இந்நிகழ்ச்சியால் ஏற்பட்ட போக்குவரத்து இடையூறுக்கு நடிகர் கமல் மன்னிப்பு கோரியுள்ளார்.

முழக்கங்களை எழுப்ப லிஸ்ட்

இதற்கு முன்னதாக,கூட்டத்தில் தொண்டர்கள் எப்படி எல்லாம் முழக்கங்களை எழுப்ப வேண்டும் என்றும், அதற்கான ஒரு லிஸ்ட் போட்டு முன்னதாகவே கொடுக்கப்பட்டு உள்ளது.

இதனை தொண்டர்களும் லிஸ்டில் உள்ளவாறே அதற்கேற்றவாறு எப்படி முழக்கங்களை எழுப்ப வேண்டும்,எந்த வார்த்தையை யார் சொல்ல வேண்டும், யார் தனியாக சொல்ல வேண்டும்,எந்த முழக்கங்களை கூட்டமாக சொல்ல வேண்டும் என அழகாக பிரித்து எழுதப்பட்டு உள்ளது.