Asianet News TamilAsianet News Tamil

கொரோனா பாதிக்கப்பட்ட வானதி சீனிவாசன் உடல்நிலை எப்படி உள்ளது? அவரே சொன்ன தகவல்.!

 காய்ச்சல் காரணமாக வானதி சீனிவாசனுக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

How is the health condition of Vanathi Srinivasan who is infected with Corona?
Author
First Published Nov 2, 2023, 11:40 AM IST | Last Updated Nov 2, 2023, 11:40 AM IST

கொரோனா தொற்று காரணமாக கோவையிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன் காய்ச்சல் குறைந்துள்ளது என வானதி சீனிவாசன் தகவல் தெரிவித்துள்ளார்.

பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன். இவர் தமிழகத்தில் மட்டும் அல்ல தேசிய அளவில் செல்வாக்கு மிக்கவராக இருந்து வருகிறார். இந்நிலையில், காய்ச்சல் காரணமாக வானதி சீனிவாசனுக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில்,  காய்ச்சல் குறைந்துள்ளதாக என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதுதொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்;- கொரோனா தொற்று காரணமாக கோவையிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன்  காய்ச்சல் குறைந்துள்ளது. மற்ற அறிகுறிகள் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறேன். நலமுடன் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios