10 நாட்களாக மருத்துவமனையில் தொடர் சிகிச்சை.. முத்தரசன் உடல்நிலை எப்படி இருக்கிறது? வெளியான புதிய தகவல்..!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கடந்த 4ம் தேதி கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருச்சிக்கு வந்தார். அப்போது, அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல்நிலை குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கடந்த 4ம் தேதி கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருச்சிக்கு வந்தார். அப்போது, அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. முதலில் மிளகுபாறை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் சுவாசப் பாதையில் கிருமிகள் தொற்று இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுமார் 10 நாட்கள் கடந்தும் அவர் வீடு திரும்பததால் அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள் வருத்தமடைந்தனர்.
இதையும் படிங்க;- எதுக்கு வானத்துக்கும் பூமிக்கும் எகிறி குதிக்கிறீங்க!புளுகு மூட்டைகளா!உதயநிதிக்காக பாஜகவை விமர்சித்த முத்தரசன்
இந்நிலையில் முத்தரசனின் உடல்நிலை குறித்து கட்சியின் மாநில துணைச் செயலாளர் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் இரா. முத்தரசன் அவர்கள் உடல் நலப் பாதிப்பு காரணமாக கடந்த 04.10. 2023 ஆம் தேதி திருச்சி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது சுவாசப் பாதையிலும், நுரையீரல் பகுதியிலும் கடுமையான கிருமிகளின் நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
காவேரி மருத்துவமனை மருத்துவர்களின் தொடர் சிகிச்சையில் தற்போது தோழர் இரா. முத்தரசன் பெருமளவு குணமடைந்து வந்துள்ளார். இன்னும் இரண்டொரு நாளில் வீடு திரும்பும் வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். எனினும், தோழர் இரா. முத்தரசன் மேலும் இரண்டொரு வாரங்கள் முழுமையாக ஓய்வில் இருக்க வேண்டும் என்பதும் மருத்துவர்கள் அறிவுரையாகும். அடுத்த பதிவில் எப்போது வீடு திரும்புவார் என்கிற தகவலை தருகிறோம். அவரை சந்தித்து நலம் விசாரிக்க வருவோர் மருத்துவர்கள் அறிவுரையை பின்பற்றி, அணுக வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.