திமுக - அதிமுக நாளேடுகள் தத்தம் எதிர்கட்சிகளை வசைபாடி, கேலிச்சித்திரம் வரைந்து தாக்குதல் தொடுப்பது வழக்கம். அந்த வகையில் இன்று முரசொலி நாளிதழ், எடப்பாடி பழனிசாமியை கிண்டலடித்து கேலிச்சித்திரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மக்கள் பேசிக்கொள்வதை போல பெட்கட்டி, முதல்வர் சிரிக்கிறாரு என்ன பெட்டு..? இல்லை முதல்வர் அழுவுறாரு என்ன பெட்டு? என மாறி மாறி பெட் கட்டிக் கொள்ளும் வகையில் கேலிசித்திரம் வெளியாகி இருக்கிறது.