குஷ்பு பா.ஜ.கவில் இணைந்து ஏன் என இயக்குனர் சுந்தர் சி விளக்கமளித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளில் கடந்த சில மாதங்களாகவே குஷ்பு பெரிதும்  ஈடுபாடு காட்டமலேயே இருந்துவந்தார். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அதற்கு  குஷ்பு ஆதரவு தெரிவித்தார். அதனையடுத்து, அவர் பா.ஜ.கவில் இணையவுள்ளார் என்று தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. இருப்பினும், அந்த தகவலை குஷ்பு உறுதியாக மறுத்துவந்தார்.

இந்நிலையில், அவர் பா.ஜ.க இணைகிறார் என்று நேற்று உறுதியாக தகவல்கள் வந்தன. அதற்காக, அவர் டெல்லி புறப்பட்டு சென்றார். இந்தநிலையில், நேற்று  காலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து குஷ்பு நீக்கப்பட்டார். அதனையடுத்து, அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து குஷ்புவும் ராஜினாமா செய்தார். இந்தநிலையில், குஷ்பு பா.ஜ.கவில் இணைந்தார்.

பாஜகவில் இணைந்த பிறகு பேசிய குஷ்பு, ‘எந்தக் குறையும் இல்லாத பிரதமர் மோடியின் ஆட்சி பிடித்துப் போய் பா.ஜ.க-வில் இணைந்ததாக பேட்டியளித்துள்ளார். இதுகுறித்து பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா, குஷ்புவின் கணவரும் இயக்குநருமான சுந்தர்.சியின் வற்புறுத்தலால் தான் குஷ்பு பா.ஜ.க-வில் சேர்ந்துள்ளார் என பேசினார். 

இதுகுறித்து இயக்குனர் சுந்தர்.சி-யிடம் கேட்டபோது, குஷ்பு எதற்காக பாஜகவில் இணைந்தார் என்பது எனக்குத் தெரியாது. எனக்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. என்னுடைய துறையே வேறு’’ என விளக்கமளித்துள்ளார்.