பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் பதவி இழந்த முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியின் ஓசூர் தொகுதி காலியாக உள்ளதாக தமிழக அரசின் இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டுளளது.
கல்வீச்சு மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு எம்.பி,க்கள், எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
இதையடுத்து அவரது எம்.எல்.ஏ பதவியும் அமைச்சர் பதவியும் பறிபோனது. இந்நிலையில் தனக்கு சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பாலகிருஷ்ண ரெட்டி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது விரைவில் விசாரணை நடைபெறவுள்ளது.
இந்த நிலையில். ஓசூர் தொகுதி காலியாக உள்ளதாக தமிழக அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதால் இந்த தொகுதி காலி என்பது உறுதியாகியுள்ளது..
ஏற்கனவே திருவாரூர், திருப்பரங்குன்றம் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் 18 தொகுதிகள் என 20 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் தற்போது ஓசூர் தொகுதியும் காலி என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் மொத்தம் 21 தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளுக்கும், நாடாளுமன்றத்துக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்படும் என தெரிகிறது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 18, 2019, 9:03 PM IST