தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் நல்லகண்ணு மற்றும் முன்னாள் அமைச்சர் கக்கனின் குடும்பத்தினருக்கு வீடு ஒதுக்கப்படும் என தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தெரிவித்துள்ளது. 

நல்லகண்ணு, தி.நகரில் உள்ள அரசு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பின் வாடகை வீட்டில் கடந்த 12 ஆண்டுகளாக வசித்து வந்த நிலையில், அங்கே புதிய திட்டத்தை வாரியம் செயல்படுத்தப் போவதாகச் சொல்லி, அந்த வீட்டைக் காலி செய்ய வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். இதனால் உடனடியாக அவர் அந்த வீட்டை விட்டு வெளியேறினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். 

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லகண்ணு  மற்றும் கக்கன் குடும்பத்தினருக்கு பொது ஒதுக்கீட்டின்படி மாத வாடகைக்கு வீடுகள் ஒதுக்கப்படும். உயர்நீதிமன்ற வழிகாட்டுதல் படி கொள்கை முடிவுகள் இறுதியில் உள்ளது.  கொள்கை இறுதியானவுடன் பொது வாழ்க்கையில் ஈடுப்ட்டோருக்கு வீடுகள் ஒதுக்கப்படும். அந்த வகையில் கக்கன் மாற்ரும் நல்லகண்ணு குடும்பத்தினருக்கு வீடுகள் ஒதுக்கப்படும்’’ என தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அறிவித்துள்ளது.