இத்தாலிச் சோனியா இந்தியர் மோடியை இழிவாகப் பேசியதை கண்டிக்காத காங்கிரஸ் கட்சி, கரு.நாகராஜனை கண்டிப்பதை ஏற்க முடியாது.  

கரூர் எம்பி ஜோதிமணி பிரதமர் மோடியை புலம் பெயர் தொழிலாளர்கள் கல்லால் அடிப்பார்கள் என்றதும் இதற்கு எதிர்வினையாக பாஜக பிரமுகர் கரு.நாகராஜன் மூன்றாம் தரப்பெண் என பதிலுக்கு ஜோதிமணியை விமர்சனம் செய்து பேசியதும் அரசியல் வட்டாரத்தில் அனலாய் கக்கிக்கொண்டிருக்கிறது.இந்த விவகாரத்தை திமுக காங்கிரஸ் விசிக போன்ற கட்சிகளை கடுமையாக சாடியிருக்கிறார் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா.



காங்கிரஸ்:
இத்தாலிச் சோனியா இந்தியர் மோடியை இழிவாகப் பேசியதை கண்டிக்காத காங்கிரஸ் கட்சி, கரு.நாகராஜனை கண்டிப்பதை ஏற்க முடியாது. 

திருமாவளவனுக்கு... 
காயதிரி ரகுராமனை விமர்சித்ததை குறிப்பிட்டு, என்ன திருமாவளவன் அவர்களே உங்களை போல பாஜக காரர்கள் நாகரீகமாக பேசலை என்கிறீர்களா? பிற சமுதாய ஆண்களுக்கு ஆண்மை இல்லை அதனால் உங்கள் பெண்கள் எங்கள் 3 ஜாதி பேரச் சொல்லி இடம் வந்து படுக்கிறார்கள். 10 மாதம்..., என்று ரொம்ப நாகரீகமாக நீங்க பேசிய வீடியோ என்னிடம் இருக்கிறது. அந்த மாதிரி எந்த பாஜகவினரும் பெண்களை பேச மாட்டார்கள். முதலில் தயாநிதி மாறனை கண்டியுங்கள்.