கிறித்துவ மத போதகர் மோகன் சி லாரசஸ் கோயில்களில் சாத்தான் இருப்பதாக பேசியதற்கு அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒருவர் மக்களை ஏமாற்றி பிழைப்பதற்கு பதில் ஆடு மாடு மேய்த்து உயிர் வாழ்ந்து கொள் எனப்பேசிய செல்போன் உரையாடல் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. 

கிறித்தவ மதபோதகரான மோகன் சி லாசரஸ் ஒரு ஜெபக்கூட்டத்தில், ‘’இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் தமிழ்நாட்டைப் போல சாத்தானுடைய அரங்குகள் கிடையாது. அதை அறிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இங்கு இருக்கிறது போல பெரியபெரிய கோயில்கள் சாத்தானுடைய அரங்குகள் கிடையாது. கும்பகோணம் போனால் நாம் நம்ப முடியாத அளவுக்கு அங்கே சாத்தான் அத்தனை கோயில்களிலும், இடங்களிலும் நிறைந்திருக்கிறான்’’ எனப்பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதனால் அவர் மீது 11 இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தான் அப்படி பேசவில்லை. மற்ற மதத்தினரின் மனம் புண்படும்படி பேசியதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் அவருக்கு போன் செய்து பேசிய ஒருவர், அந்த உரையாடலில் மோகன் சி லாரசஸுடன், அவர்,

குரல்: - ஐயா வணக்கம்...
மோகன் சி லாரசஸ்:- சொல்லுங்க

குரல்:-  ஐயா ரொம்ப பம்முறீங்களே... 
மோகன் சி லாசரஸ்:- ஆமா நீங்க எதுக்காக போன் போட்டு இருக்கீங்க ஜெபம் பண்ணனுமா..? யாருக்காக ஜெபிக்கணும்..?

குரல் :- ஆமாங்கய்யா எங்க அண்ணனுக்காக ஜெபிக்கணும்..
மோகன் சி லாசரஸ்:- சொல்லுங்க உங்க பேரு என்ன சொல்லுங்க..?

குரல்:- எம்பேரு குமரிமுத்து...
மோகன் சி லாசரஸ்:-எந்த ஊர்ல இருந்து பேசுறீங்க

குரல்:-  திருச்சியிலிருந்து பேசுறேங்கய்யா...
 மோகன் சி லாசரஸ்:-சொல்லுங்க எதுக்காக ஜெபிக்கணும்?

குரல்:- கல்யாணம் ஆகி எங்க அண்ணனுக்கு 25 வயது ஆயிடுச்சு.. குழந்தையே இல்லங்கய்யா... அவர் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாத்தான் குடியிருப்பதாக திட்டுகிறார்... அதான் குழந்தை இல்லை. 

மோகன் சி லாசரஸ்:- உங்க அண்ணன் பேர் என்ன? 

குரல்:- எங்க அண்ணன் பேரு மோகன் சி லாசரஸ் அய்யா... அவருக்கு கல்யாணமாகி இருந்து 25 வருஷமா குழந்தை இல்லை... அவருக்கு குழந்தையை கொடுக்க வேண்டுமென்று கர்த்தரிடம் ஜெபம் பண்ணுங்கள்...

மோகன் சி லாசரஸ்:- அது கர்த்தருடைய சித்தம்...

குரல்:- அப்புறம் எதுக்கு நீ இங்க ஜெபம் பண்ண எல்லாம் நடக்கிறது. இங்கே கேன்சர் மறைகிறது. செய்வினை முடிகிறது. கர்பத்தின் கனியை கொடுத்திருக்கிறார் என்றெல்லாம் சொல்றீங்க. கேன்சர் கட்டி குணமடைகிறதுனு சொல்றீங்க. கேன்சர் வந்து மருத்துவமனைகளில் எத்தனையோ நோயாளிகள் படுத்த கிடைக்கிறார்கள். அங்கே போய்  ஜெபம் செய்யலாம் இல்லையா? கட்டி மறைகிறதுனு சொல்றீங்க... என்ன கட்டி மறைகிறது? சொல்லுங்க.

மோகன் சி லாசரஸ்:- நிறைய பேரை குணப்படுத்தி இருக்கிறேன்...

குரல்:- நீங்க இங்கே வாங்க. இங்கே வந்து ஜெபம் செய்யுங்க. முதல்ல ஆடு மாடுகளை மேய்த்து வாழ வழியை பாருங்கள். இது என்ன நூற்றாண்டு... இப்போது போய் மக்களை ஏமாற்றி ஜெபம் செய்தால் கேன்சர் குணமாகிறது... கட்டி மறைகிறது என்றெல்லாம் கதை விடுகிறீர்கள்? முதலில் ரெண்டு பேரை குணமாக்குங்கள் நாங்கள் ஒட்டு மொத்தமா உங்க மதத்துல வந்து சேர்ந்துடுறோம். உங்களுக்கு வேற வேலையே இல்லையா?

மோகன் சி லாசரஸ்:- பத்தாயிரம் பேர் குணமாகி இருக்கிறார்கள். சாட்சியை காட்டவா? 

குரல்:- ஒரு மயிறும் வேணாம்... நேரடியா வா ரெண்டு பேரை மட்டும் குணப்படுத்து. உன்னை அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட்டுக்கு கூட்டிப்போறேன். பாவம் எத்தனை பேர் வேதனையோடு துடிக்கிறார்கள் தெரியுமா? அவர்களை குணப்படுத்து. நாங்க உன் மதத்துல வந்து சேர்கிறேன்’’எனப்பேசி அதிர்ச்சியளித்துள்ளார். 

வீடியோவை பார்க்க: அல்லேலூயா... இப்படியொரு சம்பவமா..? பாயிண்ட் பாயிண்டாக கேள்வி கேட்டு மோகன் சி லாசரஸை கதறவிட்ட வீடியோ