சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் தமிழக காவல்துறைக்கு கரும்புள்ளி அமைந்திருந்தாலும் அந்த தொகுதி எம்பி கனிமொழி சாதி அரசியல் செய்து வருகிறார். இறந்தவர் நாடார் என்பதால் கனிமொழி உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இந்த மரணத்தில் திமுக அரசியல் செய்ய வேண்டும் என்று முயற்சித்தது. ஆனால் அங்குள்ள மக்கள் சாதி மதம் தாண்டி ஒன்று கூடி அந்த மரணத்திற்கு எதிராகவே நீதி கேட்டு போராடி வருகின்றனர். இவர்களைத் தொடர்ந்து அரசியல்கட்சிகள் பல்வேறு சமூக அமைப்புகள் நடிகர்கள் கிரிக்கெட் வீரர்கள் என உலகம் முழுவதும் குரல் கொடுத்ததால் திமுகவின் அரசியல் எடுபடவில்லை. ஏற்கனவே தூத்துக்குடி பகுதியில் நாடார் தேவர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது.

தூத்துக்குடி சாத்தான்குளத்தில் பென்னிக்ஸ் அவரது தந்தை ஜெயராஜும் செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததால் வந்த விவகாரத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்னர். பின்னார் கடுமையாகத் தாக்கப்பட்டு கோவில்பட்டி கிளைச்சிறையில் அனுமதிக்கப்பட்டதில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த இருவர் மரணத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாகக் கண்டித்தன. தூத்துக்குடி மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தினர். சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய அனைவரும் கோரிக்கை வைத்தனர். உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து வழக்கைக் கையில் எடுத்து விசாரித்து வருகிறது.

"கொரோனாவை விடக் கொடூரமான முறையில் தமிழகக் காவல்துறை நடந்து கொண்ட காரணத்தால், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வணிகர்களான ஜெயராஜும், அவரது மகன் பென்னிக்ஸும் அநியாயமாக அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஊரடங்கு நேரத்தில், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய காவல்துறையினர், சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொள்ள பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு அனுமதித்ததன் விளைவுதான் இந்தப் பெருங்கொடூரம்” என திமுக தலைவர் ஸ்டாலின்  இருவரது மரணம் குறித்தும் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.
திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இபாஸ் எடுக்காமல் சென்னையில் இருந்து சாத்தான்குளம் வந்தார் என்கிற சர்ச்சை கிளம்பியது. ஆக ஸ்டாலின் தன் குடும்பத்துடன்  இந்த கொலையில் எப்படியாவது ஆதாயம் தேடிவிட வேண்டும் என்று கச்சைகட்டி ஆடிப்பார்த்தார். கடைசி வரை ஒன்றுமே நடக்கவில்லை.

தூத்துக்குடி எம்பி கனிமொழி செய்தியாளர்களை சந்தித்த போது..
"லாக்அப் மரணங்களில் இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தில் தமிழகம் இருப்பதாக தேசிய குற்ற ஆவணத்திலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. லாக்அப் மரணம் தொடர்பாக இதுவரை ஒரு குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யப்படவில்லை. யாருக்கும் தண்டனை கொடுக்கப்படவில்லை. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.மிக மோசமாக, மனித தன்மையே இல்லாமல் தாக்கப்பட்டு இருவர் இறந்துள்ளர். இந்த நிலை இனிமேல் வேறு எந்த குடும்பத்துக்கும் வரக்கூடாது. இது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளேன். இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மருத்துவச்சான்று கொடுத்த டாக்டர் மாஜிஸ்ட்ரேட் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 
திமுகவின் சாதி அரசியல் குறித்து பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா வெளியிட்டு ட்விட் பதிவில்..."சாத்தான்குளம் சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை பெற்று தரவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.ஆனால் திருப்புவனம் ராமலிங்கம் கொல்லப்பட்ட போது திமுக ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.ஒ இந்துக்கள் என்றால் திமுக கணக்கில் கொல்லப்பட வேண்டியவர்கள் என ஹெச்.ராஜா பதிவிட்டுள்ளார்.