Rahul Gandhi : இது மோடி அரசா ? மக்களை திசை திருப்பவே இந்து-முஸ்லிம் விவகாரம் - ராகுல் காந்தி அதிரடி பேச்சு !!

இந்தியாவில் நடப்பது நரேந்திர மோடியின் ஆட்சி அல்ல. அம்பானி, அதானியின் ஆட்சி தான் இந்தியாவில் நடக்கிறது. - ராகுல் காந்தி.

Hindu-Muslim issue - Rahul Gandhi obsession to divert people

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரத் ஜோடோ யாத்திரை என்ற இந்திய ஒற்றுமை யாத்திரையைத் தொடங்கினார்.

இந்த நடைபயணம் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியாணா மாநிலங்களைக் கடந்து தற்போது டெல்லிக்குள் நுழைந்துள்ளது. இந்த யாத்திரையில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

Hindu-Muslim issue - Rahul Gandhi obsession to divert people

இதையும் படிங்க.. Kamal : ராகுல் நேருவின் கொள்ளுப்பேரன்.. நான் காந்தியின் கொள்ளுப்பேரன் - டெல்லியில் மாஸ் காட்டிய கமல் ஹாசன்!

இன்று டெல்லியில் நடைபெற்ற பாரத் ஜோடோ யாத்திரையில் கமல் ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் கலந்துகொண்டனர். அப்போது பேசிய ராகுல் காந்தி, ‘வெறுப்புணர்வை ஒழிப்பதே இந்திய ஒற்றுமை பயணத்தின் நோக்கம்; ஆகையால், ஒற்றுமை நடைபயணத்தின் மூலம் வெறுப்புணர்வை நீக்க நினைத்தேன்.

இந்தியாவில் நடப்பது நரேந்திர மோடியின் ஆட்சி அல்ல. அம்பானி, அதானியின் ஆட்சி தான் இந்தியாவில் நடக்கிறது. நாட்டின் உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கிலேயே இந்து - முஸ்லிம் விவகாரம் எழுப்பப்படுகிறது.

Hindu-Muslim issue - Rahul Gandhi obsession to divert people

புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படுத்த தவறியது விளைவாக இளைஞர்கள் பக்கோடா விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பாரத் ஜோடோ யாத்திரை இந்தியாவை போன்றது ஆகும். இங்கு வெறுப்பு பேச்சுக்கு, வன்முறைக்கு இடம் கிடையாது. யாத்திரையில் நாய், பசு, எருமை, பன்றி உள்ளிட்ட அனைத்து விலங்குகளும் வந்தன. ஆனால் அவற்றை யாரும் என்று துன்புறுத்தவில்லை’ என்று கூறினார்.

இதையும் படிங்க.. வாட்ச் பில் இருக்கட்டும்; முதலில் டாஸ்மாக் பில்லை காட்டுங்க - அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சவால் விட்ட பெண்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios