Asianet News TamilAsianet News Tamil

காவிரி விவகாரத்தில் கர்நாடகா அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் - அர்ஜூன் சம்பத்

காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடகா அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வருகின்ற 13ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

hindu makkal katchi president arjun sampath announced protest against karnataka government on cauvery issue in trichy vel
Author
First Published Oct 10, 2023, 11:16 AM IST

திருச்சி மாவட்ட அலுவலகத்தில் நடைப்பெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், ஹிந்து மக்கள் கட்சி சார்பில், 3 கோரிக்கை மனுக்களை கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த அவர், அனைத்து கோவில்களிலும் கட்டண தரிசன முறை ரத்து செய்யப்பட வேண்டும் என்பது பொதுவான  கோரிக்கை.

உலக புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில், சுவாமி தரிசனம், வாகன நிறுத்தக் கட்டணம், சுங்கக் கட்டணம்  என பல வழிகளில் வருவாய் உயர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், அந்தப்பகுதியில் இருக்கும் மக்களுக்கும் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. சமயபுரம் பகுதி மக்களுக்கு, கட்டணம் வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். சமயபுரம் பகுதி மக்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடை அடைப்பு போராட்டம் நடத்தி உள்ளனர். 

கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை விடுவிக்ககோரி ஆடைகளை அவிழ்த்துபோட்டு திருநங்கைகள் அட்டூழியம்

உள்ளாட்சி நிர்வாகம், அறநிலையத்துறை உள்ளூர் மக்களுக்கு கட்டண வசூல் முறையை ரத்து செய்ய வேண்டும். கோவிலுக்கு அருகில் மதுக்கடைகள், அதன் அருகிலேயே வணிக நிறுவனங்கள் போன்றவை உள்ளன. அது போன்ற மதுக்கடைகளை மூட வேண்டும். திருச்சி நீதிமன்ற வளாகத்தில் 100 ஆண்டுகள் பழமையான விநாயகர் கோவில், ஒரு வாரமாக பூட்டிக்கிடக்கிறது. நீதிமன்ற வளாகத்தில் உள்ள வக்கீல்கள் சங்கக் கட்டிடத்தில் திராவிட மற்றும் கம்யூனிஸ்ட் நக்சல் வக்கீல்கள் பிரியாணி விருந்து நடத்த அனுமதிக்காததால், விநாயகர் கோவிலை பூட்டி வைத்துள்ளனர். இதனால், பக்தர்கள் மனம் புண்படுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

காவிரி ஆணையம், நீதிமன்ற உத்தரவை அவமதித்து, காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடகா அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி, ஹிந்து மக்கள் கட்சி சார்பில், தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சிகளை கண்டித்து, வரும் 13ம் தேதி அறப்போராட்டம் நடத்தப்படும்.

5 வருடங்களுக்கு பின் மீண்டும் ஜோடி சேர்ந்த தம்பதி; உறவினரின் தலையில் கல்லை போட்டு கொன்ற கள்ளகாதலன்

அல்.உம்மா, பாகிஸ்தான் ஆதரவாளர்கள், கம்யூ., மற்றும் திராவிட இயக்கத்தினர், ஹமாஸ் இயக்கத்தை ஆதரித்து வருகின்றனர். இதை மத்திய உளவுத்துறை கண்காணிக்க வேண்டும். உலகம் முழுவதும் உள்ள மத அடிப்படைவாத அமைப்புக்கள் இஸ்ரேலிய மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வு பிரச்சாரத்தை துவங்கி இருக்கின்றனர். 

இந்தியா, அமெரிக்கா போன்றவை இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளன. பாலஸ்தீன பயங்கரவாதிகள் தான் உலகம் முழுவதும் இருக்கும் பாக்., பயங்கரவாதிகளோடு சேர்ந்து, தமிழகத்திலும் மத வெறி அமைப்புகளை தூண்டி விடுவதற்கான முயற்சி நடக்கிறது. இதை உளவுத்துறை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அ.தி.மு.க., பழனிச்சாமி ஆட்சியில், தி.மு.கவிடம் பணம் வாங்கிக் கொண்டு இருந்த விவசாயிகள், இப்போது, சாராய ஆட்சியில் ஸ்டாலின் வீட்டையும், சித்தராமைய்யா வீட்டையும் முற்றுகையிட வேண்டும் என  தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios