Asianet News TamilAsianet News Tamil

சாணி எறியப்பட்ட வள்ளுவர் சிலைக்கு காவித்துண்டு... அர்ஜுன் சம்பத்தை அலேக்கா தூக்கிய போலீஸ்..!

பாஜகவினர் மற்றும் இந்துத்துவா கும்பல்கள் திருவள்ளுவரை இந்துவாக அடையாளப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் திருவள்ளுவருக்கு திருநீறு பூசி, ருத்ராட்சம் மாலை, காவித் துண்டு அணிவித்து பூசை செய்யும் அர்ஜுன் சம்பத்துக்கு போலீசார் அனுமதி எப்படி கொடுத்தார்கள். அதிமுக அரசு இதற்கு துணை போகிறதா? எனக் கேள்வி எழுப்பினர்.

Hindu Makkal Katchi founder arjun sampath arrest
Author
Tamil Nadu, First Published Nov 6, 2019, 1:34 PM IST

தஞ்சையில் திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு, திருநீறு மற்றும் ருத்ராட்சம் மாலை அணிவித்து கற்பூரம் ஏற்றி தீபாராதனை காட்டிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் திருவள்ளுவரின் உடையை காவி நிறத்தில் மாற்றியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சிலை மீது நேற்று முன்தினம் மர்ம நபர்கள் கருப்பு கலர் சாயம், சாணி பூசி அவமானப்படுத்தினார். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, காவல்நிலையத்தில் திருவள்ளுவர் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

Hindu Makkal Katchi founder arjun sampath arrest

இந்த விவகாரம் சற்று ஓய்ந்திருந்த நிலையில், இன்று திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் காவித் துண்டு, திருநீறு மற்றும் கழுத்தில் ருத்ராட்சம் மாலை அணிவித்துள்ளார். பிறகு கற்பூரம் ஏற்றி தீபாராதனை காட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அர்ஜூன் சம்பத்தின் இத்தகைய செயலுக்கு மீண்டும் கண்டனங்கள் எழுந்தன. 

பாஜகவினர் மற்றும் இந்துத்துவா கும்பல்கள் திருவள்ளுவரை இந்துவாக அடையாளப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் திருவள்ளுவருக்கு திருநீறு பூசி, ருத்ராட்சம் மாலை, காவித் துண்டு அணிவித்து பூசை செய்யும் அர்ஜுன் சம்பத்துக்கு போலீசார் அனுமதி எப்படி கொடுத்தார்கள். அதிமுக அரசு இதற்கு துணை போகிறதா? எனக் கேள்வி எழுப்பினர்.

Hindu Makkal Katchi founder arjun sampath arrest

இந்நிலையில், கும்பகோணத்தில் வைத்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவரை தஞ்சை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்படுகிறார். 

Follow Us:
Download App:
  • android
  • ios