இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் என்றும் அவர்களுடன் பேசுவதற்காக நாம் இந்தியை கற்றுக் கொள்ள வேண்டும் என்றும்  நடிகையும் இயக்குனர் மணிரத்தினத்தின் மனைவி சுஹாசினி கூறி உள்ளார். 

இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் என்றும் அவர்களுடன் பேசுவதற்காக நாம் இந்தியை கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் நடிகையும் இயக்குனர் மணிரத்தினத்தின் மனைவி சுஹாசினி கூறி உள்ளார். இதை பலரும் பல வகைகளில் விமர்சித்து வருகின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நாட்டின் உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தி மொழியை நாட்டின் இணைப்பு மொழியாக அங்கிகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என பேசினார். அவரின் இந்தப் பேச்சு இந்தி பேசாத மாநிலங்களில் கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அமித்ஷாவின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்ந விவகாரம் தற்போது திரைத்துறையிலும் மோதலாக வெடித்துள்ளது. 

கன்னட திரை நடிகர் கிச்சா சுதீஷ், திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, இந்தி ஒன்றும் தேசிய மொழி அல்ல எனக் கூறினார். அதற்கு பதிலளித்த இந்தி நடிகர் அஜய் தேவ்கன் ஹிந்தி தேசிய மொழி இல்லை என்றால் எதற்காக கன்னடம் மற்றும் தமிழ் படங்களை இந்தியில் டப் செய்ய வேண்டும் என கேட்டதுடன், இந்திதான் எப்போது நாட்டின் தேசிய மொழி, இந்தியாவின் தாய் மொழியாக இருக்கும் என்று இந்தியில் பதிவிட்டார். ஆனால் அவரின் கருத்து மறுத்த கிச்சா சுதீஷ், அது அப்படி அல்ல என மறுப்பு தெரிவித்ததுடன், நீங்கள் இந்தியில் பதிவிட்ட கருத்தை இந்தி எனக்கு தெரிந்ததால் புரிந்துகொண்டேன், இந்தியை பிரியத்துடன் படித்து வருகிறோம், ஒருவேளை அதற்கு நான் எனது தாய்மொழியான கன்னடத்தில் பதிவிட்டு வந்தால் உங்கள் நிலைமை என்ன என்று எண்ணிப் பார்க்கிறேன்.

நாங்களும் இந்தியர்கள் தானே சார் என பதிலடிக் கொடுத்தார். இந்த சர்ச்சை ஓய்வதற்குள் தற்போது பிரபல இயக்குனர் மணிரத்தினத்தின் மனைவியும் நடிகையுமான சுஹாசினி இந்தி குறித்து கருத்து ஒன்று பதிவிட்டுள்ளார். இப்படி திரைத் திரையினர் மத்தியில் இந்தி தொடர்ந்து இந்தி தொடர்பாக கருத்து மோதல்கள் இருந்து வருகிறது. இந்நிலையில் நடிகை சுஹாசினி இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்று பதிவிட்டுள்ளார். அதில், இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் அவருடன் நாம் பேச வேண்டும் என்றால் அந்த மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என பதிவிட்டுள்ளார். இவரின் இந்த கருத்தை பலரும் பல வகையில் விமர்சித்து வருகின்றனர்.