Asianet News TamilAsianet News Tamil

பட்டப் படிப்பில் ஹிந்தி கட்டாயம் !! கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அதிரடி உத்தரவு !!

நாடு முழுவதும் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்புகளில் இந்தி பாடத்தை கற்பிக்கும்படி பல்கலைக்கழக மானியக்குழு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளதையடுத்து அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
 

Hindi comple in colleges  and  universities
Author
Delhi, First Published Jun 26, 2019, 8:13 AM IST

மத்திய அரசு அண்மையில் வெளியிடப்பட்ட புதிய தேசிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையில், நாடு முழுவதும் மும்மொழி கொள்கையை அமல்படுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது.  இது, இந்தியை திணிக்கும் முயற்சி என்று தென்னிந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, 3-வது மொழியை அவரவர் விருப்பப்படி தேர்வு செய்து கொள்ளலாம் என்று வரைவு அறிக்கையில் மத்திய அரசு திருத்தம் செய்தது.

இந்நிலையில், அனைத்து இளநிலை பட்டப்படிப்புகளிலும் இந்தி பாடத்தை கட்டாயமாக்கும் முயற்சி குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன. நாடு முழுவதும் உயர் கல்வியை நிர்வகிக்கும் உயரிய அமைப்பான யு.ஜி.சி. எனப்படும்  பல்கலைக்கழக மானியக்குழு நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு  ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

Hindi comple in colleges  and  universities

அதில் 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் யு.ஜி.சி. எழுதியுள்ள கடிதத்தில் மேற்கோள் காட்டியுள்ளபடி, இங்கு தெளிவுபடுத்தப்படுவது என்னவென்றால், இந்தி கற்பித்தல் தொடர்பான ஆலோசனைகள், அபிப்பிராயங்கள் பல்கலைக்கழகங்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

இப்போது கவனப்படுத்த விரும்புவது என்னவென்றால், பல்கலைக்கழகங்கள் யாவும் சுயாட்சி பெற்ற நிறுவனங்களாகும். அவர்கள் தங்கள் அதிகாரவரம்புக்குள் எந்த ஒரு பாடப்பிரிவையும் தேர்வு செய்து, எந்த விதத்தில் அதை போதிப்பது என்பதை முடிவு செய்து கொள்ளலாம். என கூறப்பட்டுளளது. ஹிந்தி காட்டாயம் என்பதை நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது, இந்தியை திணிக்கும் மற்றொரு முயற்சி என்றும், அரசியல் கட்சிகளும், மாணவர்களும் இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Hindi comple in colleges  and  universities
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மேல்மட்ட குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், இளநிலை பட்டப்படிப்புகளில் இந்தியை கட்டாய பாடமாக திணிக்க யு.ஜி.சி. மேற்கொள்ளும் முயற்சி கவலை அளிக்கிறது. ஏற்கனவே புதிய கல்வி கொள்கை மூலம் இந்தியை திணிப்பதற்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இந்த முயற்சி நடப்பது வினோதமாக இருக்கிறது.

இந்தியா, பல்வேறு மொழிகளையும், கலாசாரங்களையும் கொண்டது. ஒரு குறிப்பிட்ட மொழியை திணிக்க முயற்சிப்பது, மற்ற மொழி பேசுபவர்கள் இடையே போராட்டத்தை தூண்டி விடும். 

டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர்களும், பேராசிரியர்களும் யு.ஜி.சி.யின் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios