அண்ணாமலையுடன்‌ புகைப்படம் எடுத்த காவலர் தூக்கி அடிக்கப்பட்டார்.. நடந்தது என்ன?

கடந்த 27-ம் தேதி நீலகிரி மாவட்டத்துக்கு வருகை தந்த அண்ணாமலை, கூடலூர் நகரில் தொண்டர்களுடன் நடைப்பயணம் மேற்கொண்டார். பின்னர், கூடலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் உரையாற்றினார். 

Hill Cop Patrol police constable transferred after taking selfie with annamalai tvk

ஊட்டியில் யாத்திரை மேற்கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ஹில் காப் காவலர் கணேசன் ஆயுதப்படைக்கு  மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். போகும் இடமில்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 27-ம் தேதி நீலகிரி மாவட்டத்துக்கு வருகை தந்த அண்ணாமலை, கூடலூர் நகரில் தொண்டர்களுடன் நடைப்பயணம் மேற்கொண்டார். பின்னர், கூடலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் உரையாற்றினார். 

இதையும் படிங்க;- பாஜகவை சவக்குழிக்குள் அனுப்பும் வேலையை அண்ணாமலை செய்கிறார் - பாலகிருஷ்ணன் விமர்சனம்

Hill Cop Patrol police constable transferred after taking selfie with annamalai tvk

அன்றைய தினம் மாலை ஊட்டிக்கு வருகை தந்த அண்ணாமலைக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது ஊர்வலத்தின் போது நீலகிரியில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள ஹில் காப்' காவலர் கணேசன்சீருடையோடு அண்ணாமலையுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Hill Cop Patrol police constable transferred after taking selfie with annamalai tvk

பணியிலிருந்த காவலர் அரசியல் கட்சித் தலைவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஹில் காப்' காவலர் கணேசனை ஆயுதப்படைக்கு மாற்றி காவல்துறை உத்தரவிட்டுள்ளது. 

இதையும் படிங்க;-  அதிமுக-பாஜக கூட்டணி முறிவு எதிர்பார்க்காமல் நடந்தது.! சமாதான பேச்சுவார்த்தை தொடங்கியாச்சு.? கிருஷ்ணசாமி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios