உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தைத் தாண்டியது. உயிரிழப்பு எண்ணிக்கையும் 576 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பரவி வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில்,  உயர்அதிகாரிகள், எம்எல்ஏக்களும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், தமிழக அமைச்சர் கே.பி.அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. இதனால், அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்நிலையில், இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், தனக்கு எந்த கொரோனா அறிகுறியும் இல்லை. முழு உடல் நலத்துடன் வீட்டில்தான் இருக்கிறேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வரும் தகவல்களில் உண்மையில்லை என்று தெரிவித்துள்ளார்.