Asianet News TamilAsianet News Tamil

வேட்பு மனு தாக்கல் செய்த அடுத்த நொடி ஓபிஎஸ்க்கு வந்த ஷாக் செய்தி.!உற்சாகத்தில் இறங்கி அடிக்க தயாராகும் இபிஎஸ்

அதிமுகவின் கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. 
 

High Court refuses to lift ban on OPS from using AIADMK flag and symbol KAK
Author
First Published Mar 25, 2024, 12:28 PM IST

அதிமுக அதிகார மோதல்

அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மோதல் காரணமாக பல பிளவுகளாக பிரிந்துள்ளது. இதனையடுத்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியும் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர் செல்வம் நீதிமன்றத்தில் தொடர்ந்து முறையிட்டார். ஆனால் நீதிமன்றம் எதிரான தீர்ப்பை வழங்கியது. இருந்த போதும் அதிமுக பெயர் மற்றும் கொடியை ஓ.பன்னீர் செல்வம் பயன்படுத்தி வந்தார். இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் முறையிட்டனர். இதனை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் அதிமுக கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்து தடை விதிக்கப்பட்டது.  

High Court refuses to lift ban on OPS from using AIADMK flag and symbol KAK

இரட்டை இலை சின்னம்- அதிரடி உத்தரவு

இதனையடுத்து அ. தி.மு.க. கொடி, சின்னத்தை ஓ.பன்னீர் செல்லும் பயன்படுத்த தடை விதித்த தீர்ப்பை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தனி நீதிபதியின் தீர்ப்புக்கு தடை விதிக்க பன்னீர் செல்வம் தரப்பு கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். மேலும் மனுவுக்கு பதிலளிக்குமாறு அண்ணா தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தனர். ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணையை ஜூன் 10ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன், சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

செங்கலை பிடித்துக் கொண்டு வித்தை காட்டுறீங்களா.? மக்கள் எல்லோரும் குடும்பியா வைத்துள்ளார்கள்.? சீறும் எடப்பாடி
 

Follow Us:
Download App:
  • android
  • ios