தமிழக அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டிக்கு, கடந்த 1998ம் ஆண்டு பேருந்து மீது  கல்வீசி தாக்குதல் நடத்திய வழக்கில்  எம்எல்ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம், 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

 

இது தொடர்பான தீர்ப்பு வந்ததும் பாலகிருஷ்ணா ரெட்டி  தனது  அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து , 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பாலகிருஷ்ணா  ரெட்டி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அந்த மேல்முறையீட்டு மனுவில்,  தன் மீது  வாகனத்தை தாக்கி எரித்ததாக நேரடி குற்றச்சாட்டு இல்லை என பாலகிருஷ்ண ரெட்டி சார்பில் கூறப்பட்டது.. இந்தநிலையில் இன்று நடந்த விசாரணையின் போது, காவல் ஆய்வாளரை திட்டியதால் என் மீது வழக்கு என காவலரே சாட்சி அளித்துள்ளார். 28 சாட்சிகளில் ஒருவர் கூட என் பெயரை சொல்லவில்லை. மேலும், வழக்கில் 72வது நபராக பாலகிருஷ்ண ரெட்டி குற்றம்சாட்டப்பட்டுள்ளார், நேரடியாக இல்லை என பாலகிருஷ்ணன் ரெட்டி தரப்பு வாதம் செய்தது.

அதற்கு, சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறு என்கிறீர்களா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பார்த்திபன் , பாலகிருஷ்ண ரெட்டியின் மேல்முறையீட்டு வழக்கில் மாலையில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில்  முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத்தண்டனையை ரத்து செய்ய முடியாது என்று நீதிபதி பார்த்திபன் மறுப்புத் தெரிவித்துள்ளார்.