high court chief justice mentioned deputy chief minister
துணை முதல்வர் பதவி என்பது அரசியல் சாசனத்தால் அங்கீகரிக்கப்பட்ட பதவி கிடையாது என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தனபால் தகுதிநீக்கம் செய்தார். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்த சபாநாயகர், நம்பிக்கை வாக்கெடுப்பில், முதல்வர் பழனிசாமிக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்யாதது ஏன்? எனவும் அவர்களையும் தகுதிநீக்கம் செய்யக்கோரி திமுக கொறடா சக்கரபாணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கின் இன்றைய விசாரணையின்போது, அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கத்தை நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்தலாமே தவிர, எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்யுமாறு சபாநாயகருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என வாதாடினார்/
இந்த வழக்கில் திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், முதல்வர் பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ்-க்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டதை சுட்டிக்காடி, இது சட்டவிரோதமான அரசு என சரமாரியாக குற்றம்சாட்டினார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, துணை முதல்வர் பதவி என்பது அரசியல் சாசனத்தால் அங்கீகரிக்கப்பட்ட பதவி என்பதை சுட்டிக்காட்டினார்.
இதன்மூலம் துணை முதல்வர் என்பவர் மற்ற அமைச்சர்களைப் போன்றவர்தான் என்பதை உறுதிப்படுத்துகிறது.
