Asianet News TamilAsianet News Tamil

கொரோனா நிவாரணம் வழங்க தடையில்லை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! குஷியில் திமுக தலைவர் ஸ்டாலின்.!!

கொரோனா ஊரடங்கு உத்தரவால் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் பொதுமக்களுக்கு உணவு, அரிசி,மளிகைப்பொருள்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை நேரடியாக வழங்க தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகளுக்கு கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டது தமிழக அரசு.இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது திமுக உள்ளிட்ட கட்சிகள். அந்த வழக்கு இன்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது,நீதிமன்றமும்  அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. 
 
High Court action ordered not to grant relief to Corona DMK leader Stalin in Khushi
Author
Tamilnádu, First Published Apr 16, 2020, 9:25 PM IST

T.Balamurukan

கொரோனா ஊரடங்கு உத்தரவால் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் பொதுமக்களுக்கு உணவு, அரிசி,மளிகைப்பொருள்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை நேரடியாக வழங்க தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகளுக்கு கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டது தமிழக அரசு.இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது திமுக உள்ளிட்ட கட்சிகள். அந்த வழக்கு இன்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது,நீதிமன்றமும்  அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. 

High Court action ordered not to grant relief to Corona DMK leader Stalin in Khushi

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்தும் விதமாக ஏப்.14ம் தேதி வரை அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை மே.3ம் தேதி வரை நீட்டித்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலைக்கு செல்ல முடியாமல், வருமானம் இல்லாமல் வறுமையில் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் கூலித் தொழிலாளர்கள், ஏழை மக்களுக்கு உணவுப் பொருட்கள், அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்களை அரசியல் கட்சிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் வழங்கி வருகின்றன. இது சமூக விலகலுக்கு எதிராக இருக்கிறது.இதனால் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று தமிழக அரசு அறிவித்தது.

High Court action ordered not to grant relief to Corona DMK leader Stalin in Khushi

 இனி உணவுப் பொருட்களையும், அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்களையும் வழங்க அரசியல் கட்சிகளுக்கும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்படுவதாகவும், அரசு, மாநகராட்சி, போலீஸார் மூலமே நிவாரணப் பொருட்களை விநியோகிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவராஜசேகரன் உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளை தொடர்ந்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆர்.சுப்பைய்யா, ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில்  விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கில் அரசு பதிலளிக்க அவகாசம் அளித்தனர்.

High Court action ordered not to grant relief to Corona DMK leader Stalin in Khushi

இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. "தீர்ப்பில் நிவாரணப் பொருட்களை வாகன ஓட்டுனர் உள்பட 4 பேர் சென்று வழங்கலாம் என்று தெரிவிக்கப்படுள்ளது.நிவாரணம் வழங்குவோர் முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நிவாரணப் பொருட்களை வழங்குவோர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தகவல் தெரிவித்தால் போதும் அனுமதி கேட்கத்தேவை இல்லை. நிவாரணப் பொருள் வழங்குவது குறித்து 48 மணி நேரத்துக்கு முன் அதிகாரிகளுக்கு தகவல் தர வேண்டும் என்று உத்தரவிட்டார்கள் நீதிபதிகள்.

Follow Us:
Download App:
  • android
  • ios